மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா.?

Maida Made From Which Grain in Tamil

Maida Made From Which Grain in Tamil

நாம் அனைவரும் சாப்பிடும் இனிப்பு வகைகள், கார வகைகள், உணவு வகைகள் போன்றவை பெரும்பாலும் மைதா மாவு மூலமாகத்தான் தயாரிக்கப்படுகிறது. சொல்லப்போனால் அனைவரும் விரும்பி சாப்பிடும் பரோட்டா மைதா மாவில் தான் செய்கிறார்கள். இப்படி எல்லா உணவு வகைகளிலும் மைதா பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா.? கோதுமை மாவு கோதுமையிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவு அரிசியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த மைதா மாவு மட்டும் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..? என்று நிறைய பேருக்கு இந்த யோசனை இருக்கும். ஓகே வாருங்கள் இந்த பதிவில் மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.? மைதா உணவுகள் உடலுக்கு நல்லதா.? கெட்டதா.? போன்ற கேள்விகளுக்கான பதில்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது.?

 மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது

 கோதுமையில் இருந்து கோதுமை மாவு, கோதுமை ரவை போன்றவை தயாரித்த பிறகு மீதியுள்ள சக்கையில் இருந்து தான் மைதா மாவு தயாரிக்கப்படுகிறது.  

இந்த மைதா மாவு உடலுக்கு முற்றிலும் தீங்கானது. கோதுமையிருந்து தவிடை நீக்கிய பிறகு தான் கோதுமை மாவு கிடைக்கிறது. இந்த கோதுமை மாவில் தான் புரோட்டீன், அமினோ அமிலம், நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன.

ஆனால் மைதாவில் முற்றிலும் ஸ்டார்ச் என்ற சர்க்கரை மட்டுமே உள்ளது. கோதுமையில் உள்ள ஸ்டார்ச்சை மட்டுமே எடுத்து மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கோதுமை மாவு பழுப்பு நிறத்தில் இருக்கும்.  ஆனால் இந்த மைதா மாவு மட்டும் ஏன் வெண்மையாக உள்ளது. ஏனென்றால் மைதா மாவில் பென்சோயில் பெராக்ஸைடு என்ற வேதியல் பொருள் கலந்து தயாரிக்கப்படுகிறது. 

மைதா மாவில் செய்த உணவை சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளவும்

 

இந்த பென்சோயில் பெராக்ஸைடு என்பது ஒரு கெமிக்கல் பொருள். இதை தலைக்கு அடிக்கும் டை, ஃபினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் போன்றவற்றில் கலப்பார்கள். அப்படிப்பட்ட கெமிக்கல் பொருளை மாவில் கலப்பதால் நீரிழிவு நோய், அல்சர் போன்ற நோய்கள் வருகின்றன.

பொருட்கள் வெண்மையாக இருப்பதற்கு ப்ளீச் செய்வது போல மைதா மாவு வெண்மையாக இருப்பதற்காக ப்ளீச் செய்யப்படுகிறது. இவ்வாறு ப்ளீச் செய்யும் போது மாவில் உள்ள குளோரின் டை ஆக்சைடு ஆனது ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து Alloxan ஆக உருவாகிறது.

 Alloxan என்பது ஒரு வகையான வேதிப்பொருள்.  இதை ஆய்வகங்களில் பயன்படுத்துவார்கள். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணமே Alloxan தான். இந்த வேதிப்பொருள் மைதா மாவில் இருக்கிறது.

அதுமட்மில்லாமல், மைதா மாவு சுவையாகவும், நீண்ட நாட்களுக்கு கெடாமலும் இருப்பதற்காக செயற்கை நிறமூட்டிகள், இரசாயன பொருட்கள் போன்ற பலவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த மைதா மாவில் உடலுக்கு தேவையான எந்த விதமான சத்துக்களும் இல்லை. இவை முற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாகும்.

கோதுமை மாவு, மைதா மாவு இல்லாமல் சூப்பரான மசாலா பூரி செய்வது எப்படி வாங்க தெரிந்துகொள்ளலாம்.

மைதா மாவு எப்போது பயன்படுத்தப்பட்டது.?

1930 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பசை மாவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும் சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக மைதாவை பயன்படுத்தி இருந்தார்கள். ஆனால் இப்பொழுது மைதா மாவு உணவாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சில நாடுகளில் மைதா  மாவை தடை செய்தும் இருக்கிறார்களாம்.

இவ்வளவு கெடுதல் இருந்தும் இந்த மைதா மாவை ஏதோ ஒரு உணவு மூலமாக அனைவரும் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறோம். எனவே மைதா மாவு கலந்த உணவுகளை தவிர்த்து கொள்வது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil