குடியரசு தினம் பற்றிய சுவாரசியமான தகவல் | What is Mean by Republic Day in Tamil

Advertisement

குடியரசு தினம் என்றால் என்ன? | What is Republic Day in Tamil

நம் நாட்டிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது என்ற கேள்வியை சிறு குழந்தைகளிடம் கேட்டால் கூட பதில் சொல்லிவிடும், ஆனால் குடியரசு தினம் பற்றி கேட்டால் சில பெரியவர்களுக்கு கூட பதில் தெரிவதில்லை. இன்றும் சில பேருக்கு குடியரசு தினத்திற்கு, சுதந்திர தினத்திற்கும் கூட வேறுபாடு தெரிவதில்லை. சுதந்திர தினம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் கூறும் சிலருக்கு குடியரசு தினம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் தெரிவதில்லை, இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் இருப்பது மிகவும் தவறல்லவா ஆதலால் நாம் இந்த தொகுப்பில் குடியரசு தினம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குடியரசு தினம் தேதி:

  • வெள்ளிக்கிழமை, ஜனவரி 26-ம் தேதி 2022 (26.01.2024)

குடியரசு தினம் என்றால் என்ன?

  • ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மக்களாட்சி என்பதை கருத்தில் கொண்டு டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் முன்னிலையில் இந்திய அரசியல் சட்டம் கொண்டுவரப்பட்டு 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது மக்கள் தங்களுக்கான தலைவரை தாமே தேர்ந்தெடுத்து கொள்வது. மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்றதாக அர்த்தம் என்ற நோக்கில் மக்களாட்சி கொண்டுவரப்பட்டது.

குடியரசு தினம் என்றால் என்ன?

  • ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த நம்மை பல தேசத்தலைவர்கள் அவர்களுடைய உயிரை தியாகம் செய்து சுதந்திரத்தை மீட்டு கொடுத்தனர். அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
  • சுதந்திரத்திற்கு பிறகு டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் இந்திய குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டார், இவரே இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார்.

குடியரசு தினம் கொண்டாடும் முறை?

  • குடியரசு தினம் 1950-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் இந்திய இராணுவ வீரர்களின் முன்னிலையில் நமது தேசிய கொடியை ஏற்றி சிறப்பிப்பார். பின் சிறப்பாக பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு பதக்கம் வழங்குவார்.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர் காவல்துறையின் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றுவார். பின் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு ஆளுநர் பதக்கங்களை வழங்கி அவர்களை கௌவுரவப்படுத்துவார்.
  • அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் தேசியக்கொடியேற்றி, தேசிய கீதம் பாடி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும்.

குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள வேறுபாடு?

  • இந்தியா விடுதலை பெற்ற நாளை சுதந்திர தினம் என்று கூறுகிறோம். சுதந்திர தினம் 1947 -ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • நமது அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாள் குடியரசு தினம்.  1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் ஆகும்.
குடியரசு தின வரலாறு

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement