கடையில் பொருட்களை வாங்குவதற்கு முன்பாக அதில் இருக்கும் Lable-லை முதலில் பார்த்து வாங்க வேண்டுமாம்..! ஏன் தெரியுமா..?

what is the most important factor to consider when buying a product in tamil

பொருட்களை வாங்குதல்

தினந்தோறும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்களை கடையில் வாங்கி கொள்வோம். சில நேரத்தில் அந்த பொருட்களை வாங்கி நம்முடைய வீட்டில் சமைப்போம். மற்ற சில நேரத்தில் கடையில் தயார் செய்து விற்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுவோம். என்ன தான் நாம் ஆரோக்கியமானது என்று பார்த்து பார்த்து சமைத்தலும் கூட அதனை வீட்டில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் விரும்புவது இல்லை. அதிலும் குறிப்பாக இன்றைய காலத்து பிள்ளைகள் கடையில் விற்கும் பொருளை வாங்கி கொடுத்தால் மட்டுமே சாப்பிடுகின்றனர். நாமும் பிள்ளைகள் சாப்பிட்டால் போதும் என்று உடனே வாங்கி கொடுத்துவிடுகிறோம். ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால் அவ்வாறு பொருட்களை வாங்குவதற்கு முன்பாக அந்த லேபிளில் இருபவனற்றை கவனிப்பது இல்லை. அதனால் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு முன்பாக அந்த பொருட்களில் இருக்கும் லேபிளில் நாம் கவனித்து வாங்க வேண்டியவை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ டூத் பேஸ்ட்டை வாங்குவதற்கு முன்பு இதை எல்லாம் கூட கவனிக்கணுமாம்..!

What is The Most Important Factor to Consider When Buying a Product:

நாம் கடையில் சென்று நமக்கு தேவையான பொருட்கள் அந்த கடையில் இருக்கிறதா என்று கவனிப்பது முக்கியம் என்றால் அதனை போலவே அந்த பொருள்களின் லேபிளில் இருப்பதை கவனிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று.

அதுமட்டும் இல்லாமல் உணவு பொருட்களின் லேபிள் Natural Flavors என்று போட்டு இருந்தால் அந்த பொருட்கள் அனைத்தும் உண்மையான Natural பொருட்கள் அல்ல.

ஏனென்றால் உலர் உணவுப்பொருட்களில் இருந்து எடுக்கப்படும் ரசாயனமானது Carrageenan என்ற வார்த்தைகளால் குறிப்பிட பட்டிருக்கும். லேபிளில் இதுமாதிரி குறிப்பிட்டு இருக்கும் பொருட்களை நாம் வாங்கி சாப்பிடும் போது நம்முடைய உடலில் அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதுமட்டும் இல்லாமல் Hydrogenated of Oil, Partially Hydrogenated Palm Oil மற்றும் Partially Hydrogenated Palm Kernel Oil இதுபோன்ற லேபிளில் குறிப்பிட்டிருக்கும் எண்ணெய் உணவுகளை நாம் சேர்த்து கொள்வதனால் நம்முடைய உடலில் பக்க வாதம், இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

மேலும் லேபிளில் சோடியம் பென்ஸோவோட் என்று குறிப்பிட்டு உணவுகளை நாம் சாப்பிடும் போது ஒவ்வாமை மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

கடையில் விற்கும் உணவுகளில் சோடியம் ஹைட்ரேட் என்று குறிப்பிட்டிருக்கும் உணவுகளை நாம் சாப்பிடும் போது குடலை பாதிப்பதோடு மட்டும் இல்லாமல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினையும் அளிக்கிறது.

ஆகவே கடையில் எந்த பொருளை வாங்கினாலும் அதில் இருக்கும் லேபிளை ஒரு முறைக்கு இரண்டு முறை சரி பார்த்து வாங்கினால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் சொல்லும் கதை என்ன..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil