Why Do We Eat Popcorn In Theater
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். எங்கள் பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏன் எல்லா தியேட்டர்லையும் Popcorn தருகிறார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். சரி இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? பதில் தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து அதற்கான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Power Button குறியீட்டுக்கு பின்னால் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா..?
தியேட்டர்ல Popcorn கொடுக்க காரணம் என்ன..?
நாம் அனைவருமே தியேட்டருக்கு படம் பார்ப்பதற்கு சென்றிருப்போம். தியேட்டர் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது பாப்கார்ன் தான். சரி நம் நாட்டில் எத்தனையோ ஸ்நாக்ஸ் வகைகள் இருக்கின்றன. ஆனால் ஏன் பாப்கார்ன் மட்டும் எல்லா தியேட்டரிலும் முதலிடத்தை பிடிக்கிறது. காரணம்,
1800 ஆம் ஆண்டுகளில் பாப்கார்ன் மட்டும் தான் சிறந்த ஸ்நாக்ஸ் ஆக இருந்தது. இந்த கால கட்டத்தில் இருப்பது போல பல வகையான ஸ்நாக்ஸ் எல்லாம் அந்த கால கட்டத்தில் கிடையாது. பாப்கார்ன் மட்டும் தான் ஸ்நாக்ஸ் ஆக இருந்தது.அந்த காலத்தில் பாப்கார்ன் கண்காட்சிகள், சர்க்கஸ் மற்றும் தெருக்களில் தான் விற்கப்பட்டன. மேலும் 1848 ஆம் ஆண்டுகளில் பாப்கார்ன், சிற்றுண்டி உணவாக இருந்து வந்தது.
ரோமன் எண்களில் I, II, III ஏன் 0 இல்லை தெரியுமா? |
பின் 1900 ஆம் ஆண்டுகளில் தான் திரையரங்குகள் கொண்டு வரப்பட்டன. அந்த நேரத்தில் படம் பார்க்கும் போது ஸ்நாக்ஸ் வகைகள் எல்லாம் கிடையாது. ஏனென்றால், அந்த காலத்தில் திரையரங்குகளில் Audio இல்லாமல் அதாவது சத்தம் இல்லாத படங்கள் தான் இயக்கப்பட்டன.
அந்த நேரத்தில் படம் பார்க்கும் போது இடைவெளியும் கிடையாது. அதனால் யாரும் ஸ்நாக்ஸ் வாங்குவதற்கு எல்லாம் வெளியில் செல்ல மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் கொண்டு செல்வதற்கு அனுமதியும் கிடையாது.
1927 ஆம் ஆண்டு தான் திரையரங்குகளில் சத்தத்துடன் கூடிய படங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த நேரத்தில் தான் மக்கள் ஏதாவது ஸ்நாக்ஸ் தியேட்டருக்கு கொண்டு செல்ல விரும்பினார்கள். அப்படி தியேட்டருக்கு போன மக்கள் அனைவரும் கொண்டு சென்ற ஸ்நாக்ஸ் தான் பாப்கார்ன். அந்த நேரத்தில் பாப்கார்ன் தான் Famous ஆன ஸ்நாக்ஸ் ஆக இருந்தது.
அதை பார்த்த திரையரங்குகளின் உரிமையாளர்கள் பாப்கானை தியேட்டரில் விற்றால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நினைத்தார்கள். அதன் பின் தான் எல்லா தியேட்டரிலும் பாப்கார்ன் விற்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவில் ஜனவரி 19 ஆம் தேதி தேசிய பாப்கார்ன் தினமாக ( National Popcorn Day ) கொண்டாடுகிறார்கள். இது தான் தியேட்டரில் பாப்கார்ன் கொடுப்பதற்கான காரணம்.
மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |