Why Indian Police Wear Khaki Uniform in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். காக்கி என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது காவல் அதிகாரிகள் தான். அப்படி காவல் அதிகாரிகளுக்கு கம்பீரத்தை கொடுப்பது காக்கி சட்டை தான். சரி ஏன் காவல் அதிகாரிகள் காக்கி நிற சீருடை அணிகிறார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவை முழுமையாக படித்து அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வக்கீல்கள் ஏன் Black Coat அணிகிறார்கள் காரணம் தெரியுமா..? |
போலீஸ் காக்கி சட்டை அணிய காரணம் என்ன..?
காவல்துறை என்பது பணியால் மட்டுமல்லாமல் ‘காக்கி’ நிற சீருடையாலும் அடையாளம் காணப்படுகிறது. இதனால் தான் நாம் போலீஸ்காரர்களை தூரத்தில் இருந்தும் அடையாளம் காண்கின்றோம். காக்கி நிறம் தான் இந்திய போலீஸ் சீருடையின் உண்மையான அடையாளமாக இருக்கிறது.
180 ஆண்டுகளாக பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே போலீசாருக்கு காக்கி நிற சீருடை தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, இந்திய காவல் துறையின் சீருடைகள் வெள்ளை நிறத்தில் இருந்தன.
ஆனால், காவல் அதிகாரிகள் மழை, வெயில், தூசு மற்றும் புழுதி என்று எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலையிலும் சென்று பணியாற்ற வேண்டும். இதுபோல அவர்கள் பணியாற்றும் போது வெள்ளை நிற சீருடை அதிகமாக அழுக்காகும் நிலை ஏற்பட்டது.
இதற்கு பின் பிரிட்டிஷ் அதிகாரிகள் சீருடையை மாற்றும் திட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்த சீருடையை மாற்றம் செய்யும் பணியை ஹாரி லேம்மின்டன் என்பவருக்கு வழங்கப்பட்டது. பின் 1846 ஆம் ஆண்டு போலீசாருக்கு கருநீல நிறத்தில் சீரூடை வழங்கப்பட்டது.
அதன் பிறகு துணியில் அழுக்கு படியும் போது ஏற்படும் நிறத்திலேயே சீரூடை வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அந்த காலங்களில் துணிகளுக்கு நிறம் சேர்க்கும் சாயம் செய்யும் தொழில்நுட்பம் கிடையாது. அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் தேயிலை இலைகளை பயன்படுத்தி ‘காக்கி’ நிறத்தில் ஒரு சாயத்தை உருவாக்கினர்.
இதைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் தங்கள் சீருடையின் நிறத்தை படிப்படியாக வெள்ளை நிறத்தில் இருந்து காக்கி நிறத்திற்கு மாற்றி கொண்டனர். தேயிலைகளை கொண்டு உருவாக்கப்பட்ட காக்கி நிறம் வெளிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் கலந்த கலவையாக இருந்தது.
அதற்கு பிறகு 1847ஆம் ஆண்டு காக்கி நிற சீருடை காவல் அதிகாரிகளின் சீருடை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நம் நாட்டில் காவல் அதிகாரிகளின் சீருடை காக்கி நிறத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
லைசென்ஸ் வாங்கும் போது ஏன் 8 போட சொல்கிறார்கள்..? காரணம் தெரியுமா..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |