பெற்றோர்களே குழந்தைகளை போன் யூஸ் பண்ணாத என்று சொல்லாமல் இப்படி Timing செட் பண்ணுங்க..!

app time limit in tamil

App Time Limit in Tamil

உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகின்றனர். அதுபோல குழந்தைகள் பயன்படுத்தும் போது நேரம் கணக்கில்லாமல் அதிலேயே இருக்கிறார்கள். எந்த ஒரு செயலியையும் பயன்படுத்தினால் தவறில்லை. ஆனால் அதற்கு Addict ஆக கூடாது. குழந்தைகளிடம் போனை வை என்று சொல்லமால் இந்த பதிவில் கூறியது போல உங்கள் போனில் செய்து விடுங்கள்.

App Time Limit in Tamil

உங்கள் வீட்டில் குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அதிகம் நேரம் போன் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை டைமிங் படி பயன்படுத்த வைக்கலாம். சுருக்கமாக சொன்னால் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் தான் பயன்படுத்த வேண்டும் என்று நேரத்தை செட் செய்துவிட்டோம் என்றால் அந்த நேரம் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள் ⇒ குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை..!

ஸ்டேப்:1

முதலில் எந்த ஆப்பிற்கு Timing செட் செய்ய வேண்டுமோ அந்த ஆப்பை லாங் பிரஸ் செய்யவும். அதில் App info  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்:2

app time limit in tamil

அடுத்து அதில் Screen time என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்:3

app time limit in tamil

பின் அதில் App timer என்பதை கிளிக் செய்ய வேண்டும். App timer கிளிக் செய்ததும் எவ்வளவு நேரம் அந்த ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்று கேட்கும்.

ஸ்டேப்:4

app time limit in tamil

எடுத்துக்காட்டாக 1 hour 30 minutes என்றால் மேல் படத்தில் உள்ளது போல் செட் செய்து Ok கொடுக்க வேண்டும்.

அவ்வளவு தாங்க இப்போ அந்த ஆப்பை பார்த்தால் பிலின்க் ஆகி இருக்கும் அதை ஓபன் செய்தால் இன்றைய நாளின் ஆப்பை  பயன்படுத்து விட்டீர்கள் இனிமேல் நாளை தான் பயன்படுத்த முடியும் என்று வந்துவிடும்.

மறுபடியும் அந்த ஆப்பை கிளிக் செய்தால் chenge timer, close என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் Change Timer என்பதை கிளிக் செய்து டைமிங் மாற்ற சொல்லும். அதில் இரண்டிலுமே 00 என்று செட் செய்தால் Timing remove ஆகிவிடும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

SHARE