You Tube-ஐ இப்படிலாமா யூஸ் பண்ணலாமா செமயா இருக்கே இந்த ட்ரிக்ஸ்…!

Advertisement

Best Youtube Tricks 

இந்த பதிவானது வாசிக்கும் வாசகர் நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் அனைவருடைய மொபைலில் உள்ள Youtube ட்ரிக்ஸ் ஒன்றினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். பெரும்பாலான மக்கள் அனைவரும் இன்றைய காலத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் தான் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக அதில் Youtube-ஐ பற்றி சொல்ல வேண்டாம். ஏனென்றால் சமையல் முதல் அழகுக்குறிப்பு, Movie என அனைத்தினையும் கண்டு களித்து வருகிறோம். ஆனால் இது மட்டும் இல்லாமல் அதில் நமக்கு தெரியாத நிறைய ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ் இருக்கிறது. ஆகையால் இன்று Youtube-ல் உள்ள நிறைய டிப்ஸ்களில் நமக்கு தேவையான மற்றும் உபயோகப்படுத்தக்கூடிய வகையில் உள்ள 2 ட்ரிக்ஸினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க அது என்னென்ன ட்ரிக்ஸ் என்று பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

யூடியூப் டிப்ஸ்:

டிப்ஸ்- 1

 உங்களுடைய மொபைலில் ஏதாவது படம், பாட்டு போன்றவற்றையினை பார்த்து கொண்டிருப்பீர்கள் அப்போது அதில் ஏதேனும் குறிப்பிட்ட பகுதியினை மட்டும் வேறு யாருக்காவது ஷேர் செய்வதற்கான டிப்ஸ் தான் இது. 

ஸ்டேப்- 1

முதலில் உங்களுடைய யூடியூப்-ஐ ஓபன் செய்து அதில் ஏதாவது படம் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்- 2

இப்போது அந்த வீடியோ பார்த்து கொண்டிருப்பதற்கு கீழே Clip என்பதை கிளிக் செய்து கொண்டு அதில் Create Clip என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

அதன் பிறகு அந்த படம் அல்லது பாட்டு அதில் எந்த பகுதியினை மற்றவருக்கு ஷேர் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்து Share Clip என்பதை கிளிக் செய்தால் போதும் எளிமையான முறையில் அனுப்பிவிடலாம்.

Instagram-ல போட்டோ, வீடியோ எல்லாம் Upload பண்றீங்களா அப்போ ஏன் இந்த ட்ரிக்ஸ் தெரியாம இருக்கீங்க… 

டிப்ஸ்- 2

 நீங்கள் யூடியூப்-ல் ஏதாவது வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போது ஏதாவது வேலையாக பாதியில் சென்று விட்டால் மீண்டும் யூடியூப்-ல் முதலில் இருந்து வீடியோவை பார்க்காமல் எந்த இடத்தில் ஸ்டாப் செய்து விட்டு சென்றீர்களோ அதற்கு அடுத்ததில் எப்படி பார்ப்பது என்பதற்கான டிப்ஸ் தான் இது. 

ஸ்டேப்- 1

உங்களுடைய மொபைலில் யூடியூப்-ல் பார்த்து கொண்டிருந்த வீடியோவை ஷேர் செய்வதற்கு முன்பாக அதில் நீங்கள் அடுத்து என்ன பார்க்க வேண்டுமோ அந்த நிமிடத்தை கணக்கில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பின்பு ஷேர் Option-ஐ கிளிக் செய்து பின்பு அதனை ஷேர் செய்து அந்த லிங்க்கிற்கு அருகில் ?t= அடுத்து நீங்கள் வீடியோவில் பார்க்க வேண்டிய நிமிடம் என்ன என்பதை கொடுத்து யாருக்கு ஷேர் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு ஷேர் செய்து விடுங்கள்.

இப்போது நீங்கள் ஷேர் செய்த வீடியோவை பார்த்தால் எளிமையாக இருக்கும்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement