Date Format With Day of Week in Excel
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. Excel என்பது நமது வேலைகளை மிக சுலபமாக்கும். இதற்காகவே Excel-யில் நிறைய Formulas இருக்கிறது. இருப்பினும் அனைத்து Formulas பற்றியும் அனைவருக்கும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. இருந்தாலும் Excel-ஐ பலப்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய Formulas-ம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் Excel-யில் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு அருமையான Formula-ஐ பற்றி தான். அது என்ன Formula என்றால் Date & Day ஆட்டோமேட்டிக்காக வருவதற்க்கான Formula-ஐ பற்றி தான். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து அதனை தெரிந்துகொள்ளவோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Date Format With Day of Week in Excel in Tamil
Excel Date Formula:
முதலில் உங்கள் Excel Sheet-ஐ Open செய்துகொள்ளுங்கள். நீங்கள் எந்த Columns-யில் உள்ள செல்லில் Date செட் செய்ய உள்ளீர்களா. அந்த செல்லில் உங்கள் mouse cursor வைத்துக்கொள்ளுங்கள். பின் Fill என்பதில் Series என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது மேல் படத்தில் காட்டியுள்ளது போல் உங்களுக்கு ஒரு பாஸ் Open ஆகும். அதில் Series in என்பதில் Columns என்பதை select செய்துகொள்ளுங்கள்.
Type என்பதில் Date என்பதை select செய்துகொள்ளுங்கள்.
Date Unit என்பதில் Weekday என்பதை Select செய்துகொள்ளுங்கள்.
Step Value என்பதில் செப்ரெட்டாக 1 என்று இருக்கும். Stop value என்பதில் தான் நீங்கள் அந்த வாரம் அல்லது மாதம் அல்லது வருடத்துக்கான கடைசி தேதியை உள்ளிட்ட வேண்டும். உதாரணத்திற்கு 31-01-2023 என்று உள்ளிட்டு Ok என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின் அந்த செல்லில் Date-ஐ டைப் செய்து. mouse cursor-ஐ பிடித்து இழுத்தீர்கள் என்றால் உங்களுக்கு அடுத்தடுத்த நாட்களுக்கான Date அதுவாகவே ஆட்டோமேட்டிக்காக வந்துவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மளிகை கடையில் ஈஸியா பில் போடுறாங்களே அது எப்படி தெரியுமா இந்த Excel Formulas பயன்படுத்திதான்..!
How to Get Day Name From Date in Excel:
இதுவரை தேதிக்கான Formula-ஐ பார்த்தோம். இப்போது நாம் அந்த Date-க்கான Days-ஐ எப்படி ஆட்டோமேட்டிக்காக வரவைக்கலாம் என்பது பற்றி தெரிந்துகொள்வம் வாங்க.
உங்களுக்கு எந்த செல்லில் Days கிரியேட் செய்ய வேண்டும் அந்த செல்லில் உங்கள் உங்கள் Mouse Cursor-ஐ வைக்கவும். பின் அதில் =Text (Date Cell,”dddd”) என்று டைப் செய்து Enter-ஐ கிளிக் செய்யுங்கள். (குறிப்பு: Date Cell என்பதில் அந்த date செல்லிற்கான Cell value-ஐ டைப் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு மேல் உள்ள படத்தை பார்க்கவும். Days என்றால் Columns-யில் =test(a2,”dddd”) டைப் செய்து Enter-ஐ கிளிக் செய்ய வேண்டும். Cell value பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.)
Excel-யில் இது கூட தெரியாம இருக்குறது ரொம்ப தப்புங்க..!
Formula-ஐ டைப் செய்த பின் Mouse Cursor-ஐ பிடித்து உங்கள் தேவையான Columns வரை இழுக்கவும். இப்படி இழுக்கும் போது அந்ததந்த Date-க்கான Days செப்ரெட்டாக வந்துவிடும்.
இனி Date and Days-ஐ கை வலிக்க டைப் செய்யாதீர்கள். இந்த Formula-வை மட்டும் Excel-யில் போடுங்க போதும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |