இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? | E-Shram Card Apply Online in Tamil

Advertisement

இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? | E-Shram Card Registration Online in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? (E-Shram Card Registration Online in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துளோம். ஒவ்வொரு துறையுமே இப்பொழுது டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தி  வருகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் இ-ஷ்ரம் என்ற இணையதளம். இந்த தளம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்றடைவதற்கும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் இந்த தளம் உருவாகியுள்ளது என்றே கூறலாம். சரி வாங்க இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது என்று பார்க்கலாம்.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

  1. ஆதார் அட்டை
  2. வங்கி கணக்கு புத்தகம்
  3. தொலைபேசி எண்
  4. கல்வி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், தொழில் திறன் சான்றிதழ் (கட்டாயமில்லை)

இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி?

https://eshram.gov.in/ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

e-shram card apply online in tamil

  • Aadhaar linked mobile number is preferred என்ற இடத்தில் (மொபைல் நம்பருடன் ஆதார் எண் இணைக்கபட்டிருக்க வேண்டும்) தொலைபேசி எண்களை உள்ளிடவும், Enter Captcha என்ற இடத்தில் அங்கு இருக்கும் Captcha-வை உள்ளிடவும்.
  • Employees’ Provident Fund Organization (EPFO) -ஆக இருந்தால் yes கொடுங்கள் இல்லயென்றால் no கொடுக்கவும்.
  • Employees’ State Insurance Corporation (ESIC) இதற்கு நீங்கள் No கொடுக்க வேண்டும், Yes கொடுத்தால் இந்த e-shram card அப்ளை செய்ய தகுதியானவர் அல்ல. இவற்றை பூர்த்தி செய்தவுடன் Sent OTP என்பதை கிளிக் செய்யவும்.

E Shram Card Online Apply Tamil:

e-shram card apply online in tamil

  • கிளிக் செய்தவுடன் உங்கள் மொபைலுக்கு OTP வரும். அதனை Enter OTP என்ற இடத்தில் உள்ளிடவும். ஓடிபியை பூர்த்தி செய்தவுடன் Submit என்பதை கிளிக் செய்யவும்.

E-Shram Card Registration Online in Tamil:

e-shram card apply online in tamil

  • Submit -ஐ கிளிக் செய்தால் படத்தில் உள்ளவாறு ஒரு பேஜ் open ஆகும். Aadhaar number என்ற இடத்தில் உங்களது ஆதார் எண்ணை தவறில்லாமல் பூர்த்தி செய்யவும்.
  • பூர்த்தி செய்தவுடன் கீழே I Agree என்று இருக்கும். அந்த இடத்தில் டிக் செய்து விட்டு Submit என்பதை கிளிக் செய்யவும். Submit கொடுத்தவுடன் உங்கள் தொலைபேசிக்கு OTP வரும்.
  • அதனை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Enter Otp பெட்டியில் (Box) பூர்த்தி செய்து Validate கொடுக்கவும்.

E Shram Card Online Apply Tamil:

E Shram Card Online Apply Tamil

  • இப்பொழுது உங்களுக்கான Registration Form வந்திருக்கும். அதில் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து விட்டு I Agree என்பதை டிக் செய்யவும். பின் Continue to Enter Other Details என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

E-Shram Card Registration Online in Tamil:

e shram card registration online in tamil

  • கிளிக் செய்தவுடன் அடுத்த பேஜ் ஓபன் ஆகும் அதில் மொபைல் எண், E-Mail id-ஐ பூர்த்தி செய்யவும் (Mail id இல்லையென்றால் அதை Skip செய்து விடலாம்).
  • Marital Status என்ற இடத்தில் திருமணம் ஆனவர் எனில் ஆம் என்றும், இல்லையெனில் No என்பதையும், Widow என்றால் அதனை தேர்வு செய்து கொள்ளவும்.
  • பின்னர் தங்களது அப்பாவின் பெயரை உள்ளிடவும். Social Category என்ற இடத்தில் உங்களின் சாதியையும், Blood Group என்ற இடத்தில் இரத்த வகையையும் தேர்வு செய்து கொள்ளவும்.
  • Differntly Abled Person-ஆக இருந்தால் ஆம் என்றும், இல்லையெனில் No என்பதையும் கிளிக் செய்யுங்கள்.
  • Differently Abled Person எனில் அதில் எந்த வகை என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

E Shram Card Online Apply Tamil:

e shram card online apply tamil nadu

  • Nominee Details என்ற இடத்தில் நாமினி கொடுப்பதாக இருந்தால் Yes என்றும், இல்லையெனில் No என்பதை கிளிக் செய்யவும்.
  • நாமினி கொடுப்பதாக இருந்தால் நாமினியின் பெயர், பிறந்த தேதி, பாலினம் (Male/ Female) உங்களுக்கு எந்த வகையில் சொந்தம் என்பதை உள்ளீட்டு Save & Continue என்பதை கிளிக் செய்யவும்.

E-Shram Card Registration Online in Tamil:

e shram card online apply tamil nadu

  • பின் தாங்கள் வசிக்கும் (Residential Area) இடம் கேட்கப்பட்டிருக்கும். அதில் தங்களது மாவட்டம், கிராமம், பின்கோடு போன்றவற்றை உள்ளிடவும்.

E Shram Card Online Apply Tamil:

e shram card online apply tamil

  • அதன் பின் Staying Current Location என்ற இடத்தில் எத்தனை வருடமாக வசிக்கிறீர்கள் என்பதை கொடுக்கவும்.
  • Migrant Worker என்ற இடத்தில் வேறு ஸ்டேட்டில் இருந்து இங்கே வந்துள்ளீர்கள் என்றால் ஆம் என்றும் இல்லையெனில் No என்பதை கிளிக் செய்யவும்.
  • Permanent Address மற்றும் Current Address ஒரே முகவரி என்றால் அதனை டிக் செய்யவும். ஒரே முகவரி இல்லையெனில் Current Address-ஐ பூர்த்தி செய்யவும். பின் Save & Continue என்பதை கிளிக் செய்யவும்.

e shram card online apply tamil

  • Educational Qualification என்பதில் தங்களது கல்வி விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழை upload செய்யவும் (கல்வி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை)
  • Monthly Income என்பதில் உங்களது வருமானத்தை பூர்த்தி செய்யவும். Income Certificate என்பதில் வருமான சான்றிதழை upload செய்யவும் (வருமான சான்றிதழ் இல்லயென்றால் அதனை விட்டுவிடலாம்). பின் Save & Continue என்பதை கிளிக் செய்யவும்.

E-Shram Card Apply Online in Tamil:

e shram card tamil

  • Occupation & Skills என்பதில் உங்களது தொழில், Experience மற்றும் Occupation Certificate போன்றவற்றை பூர்த்தி செய்யவும். பின் How Did You Acquire Skills மற்றும் Skills To Be Upgrade என்ற இடத்தில் Option வரும். அதில் ஒன்றை தேர்வு செய்யவும். பின் Save & Continue என்பதை கிளிக் செய்யவும்.

E-Shram Card Apply Online in Tamil:

e shram card tamil

Bank Account details என்ற பேஜ் open ஆகும். அதில் தங்களது வங்கி விவரங்களை கொடுக்கவும். வங்கியின் பெயர், Account no, IFSC Code போன்றவற்றை உள்ளீட்டு Save & Continue என்பதை கிளிக் செய்யவும்.

E- Shram Card Registration Online in Tamil

e-SHRAM Card Registration Online in Tamil

  • Save & Continue கொடுத்தவுடன் அடுத்த பேஜ் open ஆகி தாங்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்த்து விட்டு I Undertake என்பதில் டிக் செய்து Submit கொடுக்கவும்.
  • இப்பொழுது தங்கள் மொபைலுக்கு OTP வரும். அதனை உள்ளீட்டு Verify என்பதை கிளிக் செய்து Submit கொடுக்கவும். இப்பொழுது உங்களுக்கான e-shram card அப்ளை ஆகிவிட்டது. மேலும் உங்களுக்கான UAN எண், UAN கார்டு வந்திருக்கும். இதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement