Facebook உருவான வரலாறு தெரியுமா..?

Facebook in Tamil

Facebook in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் சமுக வலைத்தளங்களில் Facebook -ம் ஓன்று. இதை தமிழ் முகநூல் என்று கூறுகிறார்கள். Facebook என்றால் என்ன..? அதை எப்படி பயன்படுத்துவது என்ற தகவல்கள் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் Facebook எப்படி உருவானது. அது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Facebook Information in Tamil: 

Facebook Information in Tamil

Facebook என்பது Meta Platforms என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்லைன் சமூக ஊடகம் என்று சொல்லப்படுகிறது. இதை சமூக ஊடகம் அல்லது சமூக வலைப்பின்னல் சேவை என்று சொல்லலாம்.

 2004 ஆம் ஆண்டு Mark Zuckerberg என்பவர் தன் நண்பர்களான Eduardo Saverin, Andrew McCollum, Dustin Moskovitz, Chris Hughes மற்றும் Harvard கல்லூரி மாணவர்கள்ஆகியோருடன் இணைந்து Facebook நிறுவனம் தொடங்கபட்டது.  

2004 ம் ஆண்டு The Facebook என்ற வெப்சைட்டை ஆரம்பித்து செயல்படுத்தி  வந்தார். பிறகு Mark Zuckerberg அவர்கள் 2005 ஆம் ஆண்டில் The Facebook என்ற பெயரை மாற்றி Facebook என்று பெயர் வைத்தார்.

Mark Zuckerberg அவர்கள் Facebook -யை உருவாக்கும் போது அவருக்கு வயது 18 ஆக இருந்தது.

 அலெக்சா என்ற நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணையம் முழுவதிலும் உள்ள செயலிகளில் Facebook தான் இரண்டாவது மிகப் பிரபலமான இணைய தளமாக கருதப்படுகிறது. 
Facebook -ல இருக்குற இந்த Tricks எல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

Facebook நிறுவனத்தின் வளர்ச்சி: 

அதுபோல 2007 ஆம் ஆண்டின் இறுதியில் லட்சக்கணக்கான Facebook Profile -கள் உருவாக்கப்பட்டன.

பின் 2008 ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் என்ற நகரில் Facebook -ன் தலைமையகம் தொடங்கப்பட்டது. அதுபோல  2010 ஆம் ஆண்டில் Facebook -ன் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து நல்ல வெற்றியை கண்டது.  

அதேபோல 2011 ஆம் ஆண்டில் Facebook தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த Facebook நிறுவனம் Google -லை தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது.

2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர்.

உங்களுடைய Facebook Account திருடப்படாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்

 

2011 ஆம் ஆண்டில் Facebook மிகப்பெரிய Website மாறி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.

இந்த Facebook நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் 2,000 ஊழியர்களுடன் 15 நாடுகளில் செயல்பட்டு வந்தது. அதுபோல 2012 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் $1 பில்லியன் டாலர் கொடுத்து இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை Facebook நிறுவனம் வாங்கியது.

வாட்ஸ் அப் நிறுவனத்தை 2015 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் $19.3 பில்லியன் டாலர் கொடுத்து Facebook நிறுவனம் வாங்கியது.

இன்றைய நிலையில் Facebook நிறுவனம் நல்ல வெற்றியை கண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அதன் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உங்களுடைய Facebook Password மறந்துவிட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News