Facebook- யில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் பண்ணுவது எப்படி..?

Advertisement

Internet Speed Test Facebook in Tamil

இன்றைய காலத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட் போனில் தான் சிலருக்கு வாழ்க்கையே போகிறது என்று கூட சொல்லலாம். அதேபோல்  ஃபேஸ்புக்கை பயன்படுத்தாத ஆட்களே கிடையாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஃ பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். ஆனால் பேஸ்புக்கில் நமக்கு தெரியாத சில விஷயங்களும் உள்ளன.  அந்த வகையில் ஃபேஸ்புக்கில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் பண்ணுவது எப்படி..? என்பதைத் தான் இப்பதிவில் விவரித்துளோம். ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்றால் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 Facebook Internet Speed Test in Tamil:

ஃபேஸ்புக்கில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் அம்சம்:

ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்டில் ஒரு சூப்பரான அம்சம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. அதுதான் ஃபேஸ்புக்கில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் செய்யக்கூடிய அம்சம். ஃபேஸ்புக்கில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் செய்ய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் ஃபேஸ்புக் அப்டேட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி ஃபேஸ்புக், அப்டேட்டில் இருந்தால் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் செய்யலாம்.

Instagram vs Face Book இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன..?

ஃபேஸ்புக்கில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்..? 

முதலில் ஃபேஸ்புக் பயன்பாட்டை திறக்கவும்.

பிறகு உங்கள் Facebook ஆப்ஸை லாகின் செய்து கொள்ளவும்.

மேலே வலது பக்கத்தில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்யவும்.

பிறகு Setting & Privacy என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

facebook internet speed test in tamil

இப்போது கீழ்ப்பக்கம் உள்ள Wi-Fi & Cellular Performance என்பதை கிளிக்     செய்யவும்.

பின்பு அதில் Speed Tab என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Run Speed Test ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

speed test fb net in tamil

பிறகு, இறுதியாக Continue என்ற பட்டனை அழுத்தவும். இப்போது அடுத்த பக்கத்தில் Run Speed Test பட்டனை அழுத்தவும்.

speed test fb net in tamil

இப்பொழுது உங்கள் போனில் இருக்கும் இன்டர்நெட் ஸ்பீடை ஃபேஸ்புக் ஆப் அளக்க தொடங்கிவிடும். ஸ்பீட் டெஸ்ட் முடிந்ததும் பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்ற வேகம் இரண்டையும் கணக்கிட்டு உங்கள் போனின் டிஸ்பிளேவில் காண்பிக்கும்.

எனவே இந்த முறையை பின்பற்றி மற்ற ஆப்ஸ்களின் உதவி இல்லாமல் இன்டர்நெட் ஸ்பீடை சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்.

You Tube-ல இந்த விஷயம் கூட தெரிலைனா எப்படி..? அதனால உடனே தெரிஞ்சுக்கோங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil

 

Advertisement