அனைவரும் ஆசைப்பட்டது வந்துவிட்டது..! ஆன்லைனில் இருந்தாலும் மற்றவர்களுக்கு Online காட்டக்கூடாது என்று எதிர்ப்பத்தோம் அல்லவா..? வாங்க பார்க்கலாம்..!

Advertisement

Hide Online WhatsApp Update in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவரும் எதிர்பார்த்த வகையில் வந்துவிட்டது. அனைவருக்கும் யோசனையாக இருக்கும். நாம் என்ன யோசித்தோம் எதிர்பார்த்தோம் என்று. இனி வீட்டில் அண்ணன்கிட்ட திட்டுவாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒரு Option இல்லாமல் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருப்போம்.

இனி யாருக்கும் காட்டாமல் WhatsApp-யில் ஆன்லைனில் இருக்கலாம். தனித்துவமாக வைத்துக்கொள்ளாம் வாங்க தெரிந்துகொள்ளலாம்.

Hide Online WhatsApp Update in Tamil:

நாம் வாட்ஸப்பில் நிறைய விதமான Option வைத்திருந்தாலும் இது இருந்தால் நல்லா இருக்கும். அது இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லிக்கொண்டு இருப்போம். அதேபோல் தான் நாம் ஆன்லைனில் இருப்பது சிலருக்கு தெரியக்கூடாது என்று சொல்லிக்கொண்டு இருப்போம் அதனை Update செய்து உள்ளார்கள்.

அதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க.

How to Hide Online in WhatsApp in Tamil:

நாம் Status வைக்கும் போது சிலருக்கு நாம் ஸ்டேட்டஸ் வைப்பது தெரியக்கூடாது என்று நினைப்போம் அல்லவா. அதனை நாம் எப்படி சென்று Hide செய்தோமோ அதனை தான் இங்கயும் செய்யப்போகிறோம். வாங்க அது எப்படி என்று பார்ப்போம்.

ஸ்டேப் -1

How Hide Online in Whatsapp in Tamil

 

முதல் WhatsApp சென்று அதில் செட்டிங்ஸ் என்ற Option கிளிக் செய்வீர்கள்.

ஸ்டேப் -2

அதில் ஸ்டேட்டஸ் மறைப்பதற்கு அல்லது Last seen மறைப்பதற்கு எப்படி செல்வீர்களோ அதே போல்  Privacy Option-ஐ கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப் -3

பிறகு அவற்றில் Last Seen என்ற Option-ஐ கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப் – 4

hide last seen in whatsapp in tamil

 

அவற்றில் Everyone, My Contacts, My Contacts except.. Nobody என்ற நான்கு வகையான Option  இருக்கும் அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட நபரை மட்டும் Hide செய்ய வேண்டும் என்றால் My Contacts except.. என்பதை கிளிக் செய்து உங்கள் Online Status யாருக்கெல்லாம் காட்ட கூடாதோ  அவர்களை மட்டும் தேர்வு செய்து Except செய்துகொள்ளலாம். இல்லை அனைவருக்குமே உங்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸ் காட்ட கூடாது என்றால் Nobody என்ற option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

அதன் பிறகு அதன் கீழ் Who can see when I’m online கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு கீழ் Option இருக்கும் அதில் Same as Last Seen என்ற Option னை கிளிக் செய்துவிடால் நீங்கள் ஆன்லைன் இருந்தால் யாருக்கும் Online என்று காட்டாது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉  WhatsApp -ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் இருந்தோமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement