How to Secure Your Facebook Account From Hackers in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்று தொழில்நுட்பம் பதிவில் மிகவும் பயனுள்ள தகவலை பற்றித்தான் பார்க்கப்போகின்றோம். அதாவது உங்களுடைய FB அக்கவுண்ட்டை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்று தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக பேஸ்புக்கை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள், அதில் அவர்களின் புகை படத்தையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நமது FB அக்கவுண்ட்டில் பல மோசடிகளும் நடந்து வருகிறது. தற்பொழுது பலரது FB அக்கவுண்ட் போலி கணக்கு மூலம் திருடப்படுகிறது. இது போன்ற பிரச்சனையில் இருந்து நாம் பாதுக்காப்பாக இருக்க உங்களுடைய FB அக்கவுண்ட்டில் ஒரு செட்டிங் செய்தால் போதும், அவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இன்ஸ்டாகிராமில் உங்களுடைய Likes, Views யாருக்கும் காட்டாதபடி மறைக்க முடியும் |
How to SecureYour Facebook Account From Hacking in Tamil:
உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்ட் எப்படி திருடப்படுகிறது தெரியுமா.? முதலில் ஹேக்கர் உங்களுடைய ப்ரொபைல்லையும், உங்களுடைய புகை படத்தையும் பார்த்து, அதற்கு தகுந்தது போல ஒரு போலி கணக்கை உருவாக்கி அதில் உங்களுடைய புகைப்படங்களை போஸ்ட் செய்து, பிறகு உங்களுடைய நண்பர்களை Friend Request கொடுத்து, நீங்கள் பேசுவது போல பேசி அவர்களிடம் பணங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
இது போன்ற பிரச்சனை உங்களுக்கு வராமல் தடுக்க உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டில் இந்த செட்டிங்ஸ் மட்டும் செய்தால் போதும், இதற்காக நீங்கள் எந்தவிதமான ஆப்களும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் அவற்றை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
ஸ்டேப்:1
முதலில் உங்களுடைய மொபைலில் அல்லது லேப்டாப்பில் FB அக்கவுண்ட்டை ஓபன் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:2
அடுத்ததாக உங்களுடைய அக்கவுண்ட் இருக்கும் பக்கம் ஓபன் ஆகும். அதில் உங்களுடைய ப்ரொபைல் இருக்கும் கீழ் பக்கத்தில் Post, About, Friends, Photos,Videos, Check in, More என்று இருக்கும் அதற்கு பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:3
மூன்று புள்ளிகளை கிளிக் செய்ததும் அதில் View As, search, account status, archive, story archive, activity log, profile and tagging settings, அடுத்ததாக lock profile என்று இருக்கும் அதை ஓபன் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:4
lock profile ஓபன் செய்த பிறகு ஒரு சிறிய பேஜ் ஒன்று ஓபன் ஆகும் அதில் கடைசியாக நீல நிறத்தில் lock your profile என்று இருக்கும் அதை கிளிக் செய்ததும் உங்களுடைய ப்ரொபைல் லாக் ஆகிவிடும். இதுபோல செய்வதன் மூலம் உங்களுடைய அக்கவுண்ட்டை எந்த ஹேக்கராலும் கூட ஹேக் செய்ய முடியாது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |