Instagram Using Tips in Tamil
ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் வாட்சப், பேஸ் புக் போல இன்ஸ்டாக்ராமும் ஒன்று. இன்ஸ்டாக்ராமில் பிரபலம் ஆனவர்கள் பல பேர் இருக்கிறார்கள். மேலும் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது. இதில் போட்டோ, வீடியோ, ரீல்ஸ் போன்றவை செய்வீர்கள். இதை தாண்டி இன்ஸ்டாகிராமில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Instagram Usage Time Limit in Tamil:
இன்ஸ்டாகிராமிற்கு சென்றால் சில நபர்கள் அதிலே இருந்து விடுவார்கள். நேரம் தெரியாமல் அதிலேயே காலத்தை கழிக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் பள்ளியில் படிக்கும் போது 2 வகுப்பு முடிந்ததும் எப்படி பிரேக் வருகிறதோ அது போல நீங்கள் இன்ஸ்டாகிராம் அதிக நேரம் பயன்படுத்தும் போது இடையில் பிரேக் வைக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ Instagram பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
ஸ்டேப் -1
இன்ஸ்டாகிராமிற்கு சென்று அதில் உங்களின் PROFILE -யை கிளிக் செய்து Your Activity என்பதை கிளிக் செய்யவும்.
பின் அதில் Time Spend என்பதை கிளிக் செய்து Set Remainder to Take Breaks என்பதை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் மூன்று Time ஆப்ஷன் வரும். அதில் உங்களுக்கு தேவையான ஆப்ஷனை கிளிக் செய்து செட் செய்து கொள்ளவும்.
எடுத்துக்காட்டுக்கு, 30 நிமிடத்திற்கு ஒரு முறை பிரேக் வேண்டுமென்றால் Every 30 minutes என்பதை கிளிக் செய்து Done கொடுத்து விடவும்.
இதை நீங்கள் எவ்வளவு நேரம் செட் செய்கிறீர்களோ அந்த நேரத்திற்கு ஒரு தடவை உங்களுக்கு NOTIFICATION வரும்.
Set Daily Time Limit Instagram in Tamil:
நீங்கள் இன்ஸ்டாகிராமில் பிரேக் டைம் செட் செய்தாலும் அதிலே தான் இருக்கேன். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை, படிக்க முடியவில்லை என்றால் தினமும் இவ்ளோ நேரம் தான் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ண முடியும் என்று டைமிங் செட் செய்து கொள்ளவும். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
இன்ஸ்டாகிராமிற்கு சென்று அதில் உங்களின் PROFILE -யை கிளிக் செய்து Your Activity என்பதை கிளிக் செய்யவும்.
பின் அதில் Time Spend என்பதை கிளிக் செய்து SET Dailey Time Limit என்பதை கிளிக் செய்யா வேண்டும்.
பிறகு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பார்க்க வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்து Done கொடுத்து விடவும்.
இதையும் படியுங்கள் ⇒ இன்ஸ்டாகிராமில் உங்களுடைய Likes, Views யாருக்கும் காட்டாதபடி மறைக்க முடியும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |