பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள் | Marriage Registration Documents in Tamil

திருமணத்தை பதிவு செய்வது எப்படி? | Marriage Registration Tamilnadu Marriage in Tamil  | ரிஜிஸ்டர் மேரேஜ் செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே இன்று தொழில்நுட்ப பதிவில் நாம் பார்க்க போகிறது என்னவென்றால்? பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகிறோம். தமிழ்நாட்டில் எங்கு திருமணம் நடந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் என்பது நம் நாட்டின் சட்டம். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது இருக்கும் காலகட்டம் பாதிக்கு பாதி திருமணம் பதிவு அலுவலகத்தில் நடக்கிறது. அதனால் அதற்கு தேவைப்படும் ஆவணம் என்ன வேண்டும் என்பதை தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம்.

ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி

பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள்:

 1. பள்ளி அல்லது கல்லூரி மாற்று சான்றிதழ், நீங்கள் படிக்காதவர்களாக இருந்தால் உங்களுடைய பிறப்பு சான்றிதழ்.
 2. இரண்டாவதாக ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை சமர்ப்பிக்கலாம்.
 3. ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்ட் சமர்ப்பிக்கலாம்.
 4. பாஸ்போர்ட் சைஸ் நான்கு போட்டோ சமர்ப்பிக்கவும்.
 5. உங்களின் திருமணத்தை பதிவு செய்யும் பொழுது இரண்டு நபர்கள் சாட்சி கையெழுத்து போட வேண்டும். அப்படி போடுபவர்களின் அடையாள அட்டை சமர்ப்பிக்கவும்.
 6. உங்களின் திருமணம் பத்திரிக்கை இரண்டு சமர்ப்பிக்கவும்.

பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள்:

 1. திருமணம் நடக்கும் ஒப்புகை சீட்டு சமர்ப்பிக்கவும். ஒப்புகை சீட்டு என்றால் உங்களின் கல்யாணம் கோவிலில் நடந்தால் அங்கு உங்களுக்கு கல்யாணம் நடந்ததுக்கு ஆதாரமாக கொடுக்கப்படும் சீட்டு ஒப்புகை சீட்டு ஆகும். உங்கள் கல்யாணம் எங்கு நடந்ததோ அதற்கான அடையாளத்தை சமர்ப்பிக்கலாம்.
 2. உங்களின் திருமணம் திருமண மண்டபத்தில் நடந்தால் அங்கு கொடுக்கப்படும் சான்றிதழை கொடுக்க வேண்டும். இது கட்டாயம் அல்ல நீங்கள் திருமண பதிவு அலுவலகத்தில் கேட்டால் மட்டும் கொடுக்க வேண்டும்.
 3. VAO சான்றிதழ் அதாவது உங்களின் கல்யாணம் வீட்டில் நடந்தால் திருமணம் நடந்ததற்கான ஆதாரம் கேட்கப்படுவார்கள். இதுவும் பதிவு அலுவலகத்தில் கேட்டால்தான் சமர்ப்பிக்க வேண்டும்.
 4. Form 1:Marriage Registration Seiya Thevaiyana Avanam in Tamil மேலே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை சரியாக விண்ணப்பித்த பிறகு விண்ணப்ப படிவம் இரண்டை விண்ணப்பிக்க வேண்டும்.

11. Form – 2:

Register Marriage Rules in Tamilமேலே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் எங்கு நடந்தது என்பதையும் அதற்கு பிறகு கேட்கப்படும் கேள்விகளுக்கு கவனமாக விண்ணப்பித்து விடவும்.

12. Form – VII இந்த விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும்.

marriage registration seiya thevaiyana avanam in tamil

 • மேலே கொடுக்கப்பட்ட படத்தை போல முழு விவரங்களை விண்ணப்பித்து விடவும்.
 • இந்த படிவத்தை https://tnreginet.gov.in/portal/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
 • மேலே கொடுக்கப்பட்ட ஆவணங்கள் தேவைப்படும். அந்த ஆவணங்களை இரண்டு நகல்கள் எடுத்துக்கொள்ளவும். பிறகு அதனை எந்த முறையில் வைக்க வேண்டும் என்றால்? முதலில் Form நம்பர் II அதன் பின் Form VII வைக்கவும் அதன் பின் Form I கடைசியாக மேல கொடுக்கப்பட்ட ஆவணங்களை வைக்கவும். இதுவே பதிவு திருமணம் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil