உங்கள் போனில் Call Forwarding செய்வது எப்படி..?

Mobile Call Forwarding in Tamil

Mobile Call Forwarding in Tamil

அன்பு உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் Call Forwarding பற்றிய தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய காலகட்டம் முழுவதும் மொபைல் போனில் தான் இயங்குகிறது. மொபைல் போன்கள் இல்லாத வீடுகளே கிடையாது.

இன்றைய நிலையில் மொபைல் போனின் பயன்பாடு அதிகம் முன்னேறி கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய போனில் Call Forwarding ஆகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா..?  இந்த பதிவை படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Mobile நம்பரை மறைத்து Private Call செய்வது எப்படி..?

Call Forwarding In Tamil:

Call Forwarding என்பது ஒருவரிடம் இருந்து உங்களுக்கு வரும் அழைப்புகளை மற்றும் செய்திகளை வேறொரு மொபைல் எண்ணிற்கு Forward செய்வதே ஆகும்.

இதன் மூலம் உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் மற்றொரு எண்ணிற்கு Forward செய்ய முடியும். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அவசியமாக இந்த தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் செல்போனில் *#62# என்று டயல் செய்யுங்கள். Not Forwarded என செய்தி வந்தால் பயப்பட தேவையில்லை.

Call Forward என்ற சொல்லுக்கு பின் 1 அல்லது 2 தொலைபேசி எண் வந்தால் உங்கள் தொலைபேசியின் வழியே நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகள் அனைத்தையும் யாரோ ஒருவர் கண்காணிக்கிறார்கள் என்று அர்த்தம்.

Call Forwarding Activated எப்படி செய்வது..? 

  • முதலில் Call Forward ஆகிறதா என்பதை தெரிந்து கொள்ள  *#21#   என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள். அப்பொழுது Not Forwarded என்ற செய்தி வந்தால் உங்களுடைய தகவல்களை யாரும் கண்காணிக்கவில்லை என்று அர்த்தம்.
  • அதேபோல Call Forwarding Activate செய்ய *21* என்ற எண்ணை பதிவு செய்து இந்த எண்ணுடன் நீங்கள் எந்த எண்ணிற்கு Call Forwarding செய்ய விரும்புகிறீர்களோ அந்த எண்ணை பதிவு செய்து இறுதியில் # கொடுத்து டயல் செய்ய வேண்டும்.
  • அதாவது, உதாரணமாக  *21*1234567896#  என்று இது போல நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் எண்ணை பதிவு செய்து டயல் செய்ய வேண்டும்.

Call Forwarding Deactivate எப்படி செய்வது..? 

அதேபோல நீங்கள் Forward செய்த எண்ணை Deactivate செய்வதற்கு  ##21#  என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.

இதுபோல நீங்கள் உங்கள் போனில் Call Forwarding ஆகிறது என்றால் இந்த ##21# எண்ணிற்கு டயல் செய்து அதை நீக்க முடியும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil