Play Store ஆப் தானாவே நம்ம Account -ல இருக்குற பணத்தை எடுத்துகுமா..? அப்போ அந்த Settings உடனே மாத்தனுமே..!

Advertisement

Play Store App Safety Settings

இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். சிறிய குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனை அவ்வளவு ஆர்வமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போனில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் போனை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றது. அதுபோல தினமும் இந்த பதிவின் வாயிலாக போனில் இருக்கும் Settings மற்றும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று Play Store ஆப்பில் இருக்கும் சூப்பரான Safety Settings பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Play Store App Safety Settings in Tamil: 

Safety Settings -2 

Settings in

முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Play Store ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture -யை கிளிக் செய்து, அதில் கீழ் இருக்கும் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Authentication

பின் அதில் Authentication என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Google Play Store ஆப் பற்றி இவ்வளவு தகவல்கள் இருக்கா..?

 

Require Authentication For Purchases

பின் அதில் கீழே இருக்கும் Require Authentication For Purchases என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Never

பின் உங்களுக்கு ஒரு திரை தோன்றும். அதில் Never என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Password கேட்கும். அதில் உங்களுக்கு நினைவில் நிற்கும் வகையில் ஏதாவது ஒரு Password கொடுக்க வேண்டும்.

 இதுபோல ஏன் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய போனை உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகளிடம்  கொடுப்பீர்கள். குழந்தைகள் போனில் Game விளையாடும் போதோ அல்லது ஏதாவது Game டவுன்லோட் செய்யும் போது இடையில் ஏதாவது ஒரு Ads வரும். Meesho போன்ற ஆப்களில் இருந்து Purchase செய்வதற்கான Ads வரும். அதை குழந்தைகள் தெரியாமல் கிளிக் செய்து Purchase செய்து விடுவார்கள். அதனால் இதுபோல Password போட்டு வைப்பது நல்லது.  
உங்க போன் Play Store App -ல இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!

Safety Settings -1 

முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Play Store ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture -யை கிளிக் செய்ய வேண்டும்.

Settings in

பின் அதில் கீழ் இருக்கும் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

General in tamil

பின் ஒரு திரை தோன்றும். அதில் முதலில் General என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

Play store -ல் இந்த settigns-யை மாற்றினால் நல்லது.!

 

Account and Device Preferences

அடுத்து அதில் Account and Device Preferences என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும்.

Clear Device Search History

அதில் கீழே நகர்த்தி சென்றால் Clear Device Search History என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சிறிய திரை தோன்றும். அதில் Clear History என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

 இதுபோல செய்வதால் நீங்கள் சில நேரங்களில் ஆப்களை டவுன்லோட் செய்யும் போது அது டவுன்லோட் ஆகாமல் இருந்திருக்கும். அதுபோல நீங்கள் ஆப்பை டவுன்லோட் செய்து அதை பாதிலேயே Cancel செய்திருப்பீர்கள். அது உங்கள் போனில் Clear ஆகாமல் இருக்கும். அது உங்கள் போனில் இருக்கும் டேட்டாவை அதிகமாக பயன்படுத்துகிறது. அதனால் செய்வது நல்லது.  

 

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement