Smartphone Safety And Security Settings
இன்றைய நிலையில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஸ்மார்ட் போன் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியும். நாம் பயன்படுத்தும் போனில் எத்தனையோ நன்மைகள் இருக்கிறது. ஸ்மார்ட் போன் வந்ததற்கு பின்னால் நம் கையில் தான் உலகம் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் நாம் போனை பயன்படுத்தும் விதத்தை வைத்து தான் அதன் நன்மையும் தீமையும் இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட் போனில் மாற்ற வேண்டிய Settings என்ன என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Smartphone Safety And Security Settings in Tamil:
Security Settings -1
முதலில் உங்கள் போன் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Security என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் அதில் உள்ளே சென்றால் Security Update என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
பிறகு ஒரு திரை தோன்றும். அதில் கீழே Check For Update என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து Update செய்ய வேண்டும்.
இதுபோல செய்வதால் உங்கள் போனில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் Unwanted Apps மற்றும் வைரஸ் உள்ள ஆப்ஸ் எல்லாம் இந்த Security Update செய்யும் போது தானாகவே Delete ஆகிவிடும்.Smart Phone -ல இந்த Settings எல்லா இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் இருந்தோமா..? |
Security Settings -2
அதேபோல் உங்கள் போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Google என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Security என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
அதில் Google Play Protect என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் உள்ளே சென்றால் மேலே Settings ஆப்சன் இருக்கும்.
அதை கிளிக் செய்தால் உள்ளே 2 ஆப்சன் இருக்கும். அந்த ஆப்சன் OFF செய்யபட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.
உங்கள் போனில் உங்களுக்கே தெரியாமல் டவுன்லோட் ஆகும் ஆப்ஸ் மற்றும் Play Store இல்லாமல் google Chrome போன்றவற்றில் டவுன்லோட் செய்த ஆப்ஸ் எல்லாம் வைரஸ் இருந்தால் இப்படி செய்யும் போது அது வைரஸ் இருக்கும் ஆப்பை கண்டறிந்து Delete செய்யும். அதனால் இந்த 2 ஆப்சனையும் ON செய்து வைத்து கொள்ளுங்கள்.இந்த Settings-யை மட்டும் மாத்திடுங்க..! Ads தொல்லையே இருக்காது..! |
இதையும் கிளிக் செய்து பாருங்கள் –> எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |