Telegram பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Telegram App in Tamil 

நேயர்களுக்கு வணக்கம்..! நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் Whatsapp, Facebook மற்றும் Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறோம். அப்படி நாம் பயன்படுத்தும் Whatsapp செயலியை போலவே ஒரு ஆப் இருக்கிறது என்றால் அது Telegram ஆப் தான். இன்றைய நிலையில் Telegram ஆப்பை மக்கள் அனைவரும் அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல அந்த Telegram எப்படி உருவானது..? அதை கொண்டு வந்தது யார் என்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் Telegram App பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Telegram App Information in Tamil: 

Telegram App in Tamil 

நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் இதுவும் ஓன்று. இந்த Telegram ஆப்பை Whatsapp போலவே செய்திகளை பரிமாற்றம் செய்யும் செயலி என்று சொல்லப்படுகிறது. இதை தமிழில் “தந்தி” என்று சொல்கிறார்கள். 

 இந்த Telegram ஆப் 2013 ஆம் ஆண்டு ரஷ்ய சமூக ஊடக தொழிலதிபர் நிகோலாய் மற்றும் பாவெல் துரோவ் ஆகியோரால் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த செயலி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று iOS இயங்கு தளத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதுபோல 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று Android இணையத்தளத்திற்காக  தொடங்கப்பட்டது. இதை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இரண்டும் சேர்ந்த கலவை என்று சொல்லப்படுகிறது. இதன் செயல்பாட்டு மையம் துபாயில் அமைந்துள்ளது.

இந்த டெலிகிராம் ஆப்பை பயன்படுத்தி புகைப்படங்கள், காணொளிகள், ஒட்டிகள், ஒலி, மற்றும் கோப்புகள் போன்றவற்றை எந்த வகையில் வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்ய முடியும்.

இது தகவல் மற்றும் செய்திகளை பரிமாற்றம் செய்யும் போது End-to-end என்ற வசதியை வழங்குகிறது. இதன் செயலிகள் திறந்த மூல மென்பொருள் என்று கூறப்படுகிறது.

 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெலிகிராம் 500 மில்லியன் பயனர்களை கண்டு வெற்றி பெற்றது. இது ஜனவரி 2021 இல் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடு என்ற பெருமையை பெற்று தந்தது. 

அதுபோல ஆகஸ்ட் 2021 இல் உலகளவில் 1 பில்லியன் பதிவிறக்கங்களுடன் Telegram App நல்ல வெற்றியை கண்டது.

Youtube App யூஸ் பண்றீங்களா ..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Telegram App Advantages in Tamil:  

Telegram App Advantages in Tamil

இந்த Telegram ஆப் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் கணக்கில் பல சாதனங்களைச் சேர்க்க முடியும். அதுபோல அனைத்து செய்திகளைப் பெற முடியும்.

மேலும், இதில் இணைக்கப்பட்ட சாதனங்கள் தனித்தனியாகவோ அல்லது அனைத்தையும் ஒரே நேரத்திலோ அகற்ற முடியும்.

அதுபோல இதில் தொடர்புடைய எண்ணை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். இப்படி செய்யும் போது, ​​பயனரின் தொடர்புகள் தானாகவே புதிய எண்ணைப் பெறுகிறது.

Telegram பயன்படுத்தும் ஒரு பயனர் தனது தொலைபேசி எண்ணை வெளிப்படுத்தாமல் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியும். அதுபோல பெயரை மறைத்து மாற்று பெயரில் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியும்.

WhatsApp Chat-ஐ Telegram-ற்கு மாற்ற வேண்டுமா? அப்போ இந்த பண்ணுங்க போதும்..

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement