இது மட்டும் தெரிந்தால் True Caller ஆப்பை பயன்படுத்த மாட்டீர்கள்..!

truecaller side effects in tamil

ட்ரூ காலர் இன்ஸ்டால்

வணக்கம் நண்பர்களே.! உலகில் உள்ள பெருமபாலான மக்கள் True caller ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப் உங்களது போனில் சேவ் பண்ணாத நபர் யாராவது உங்களுக்கு போன் செய்தால் அவர்களின் விவரத்தை கொடுக்கிறது. இதனால் இந்த ஆப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆப்பை பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொணடால் நீங்கள் இந்த ஆப்பை Uninstall செய்து விடுவீர்கள். வாங்க அப்படி என்ன இருக்கு என்று ஆர்வமாக உள்ளதா.! சரி வாங்க நேரத்தை கடத்தாமல் பதிவினுள் செல்லுவோம்.

Truecaller Disadvantages in Tamil:

True caller இருந்தால் எப்படி தெரியவர்கள் போன் செய்யும் போது அவர்களின் விவரத்தை எப்படி கொடுக்கிறது என்று யோசித்திருக்கீர்களா.! அப்படி யோசித்தீர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ Truecaller-ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

நீங்கள் True caller ஆப்பை இன்ஸ்டால் செய்யும் போதே உங்களின் விவரங்களை கேட்கும் அதை பதிவிட்டால் மட்டுமே இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய முடியும். இப்படி நீங்கள் பதிவிட்ட பிறகு நீங்கள் யாருக்கும் கால் செய்தாலும் உங்களின் விவரத்தை கொடுக்கிறது.

 நீங்கள் True caller ஆப்பை பதிவிறக்கம் செய்வதற்கு கேட்கும் permission எல்லாத்தையும்  கொடுத்ததும் இந்த ஆப் உங்களின் Call history, Contact list, Messgaes Data போன்ற அனைத்து தகவல்களையும் எடுத்து கொள்கிறது. மேலும் Location, ip முகவரி இன்னும் பல தகவல்களை எடுத்து கொள்கிறது.  இந்த ஆப்பை தவிர மற்ற எல்லா ஆப்களும் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு தகவல்களை கேட்கும். ஆனால் இந்த ஆப்பை தவிர மற்ற ஆப்கள் தகவல்களை வெளியிடாது. ஆனால் True caller அப்படியில்லை அதனுடைய வேலையே தகவல்களை சேகரித்து தேடும் நபர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.  

இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நினைக்கிறீர்களா..! இந்த பதிவை படித்த பிறகு True caller ஆப்பை வைத்திருப்பது உங்களுடைய விருப்பம் நண்பர்களே.! உங்களுடைய நலன் கருதி சொல்ல இருப்பது ஒன்று தான் உங்களில் மொபைலில் தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் Smart Phone -ல் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News