ஒரு SMS அனுப்புனா? BANK உங்கள் கையில் இருக்கும்..! SMS பண்ணிட்டிங்களா

whatsapp banking in tamil

பணம் அனுப்புவது எப்படி..?

நண்பர்களே வணக்கம் பொதுவாக பணம் அனுப்புவது என்றால் முன்பு வங்கிக்கு செல்வது வழக்கம் ஆனால் அதனை இந்த கணினி காலத்தில் போன் மூலம் பணம் அனுப்பும் அளவுக்கு நம்முடைய கணினி காலம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனாலும் சிலருக்கு அதில் எப்படி பணம் அனுப்புவது என்ற குழப்பத்தில் வங்கிக்கே நேரடியாக சென்று பணத்தை அனுப்பி வருகிறார்கள். என்னடா இது வாட்ஸ் ஆப் பயன்படுத்திவிட்டு பணம் அனுப்ப தெரியாத என்று கேளி பேசுவார்கள். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்துவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க..!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம் அதேபோல் விரைவிலும் பணம் அனுப்ப முடியும். இப்போது வாட்ஸ்அப் பேங்கிங் சேவையை SBI, HDFC, ICICI, Bank of Baroda (BOB) மற்றும் Axis Bank போன்ற அனைத்து முன்னணி வங்கிகளும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வாங்க விரைவாக அதனை பற்றிய தகவலை தெரிந்துகொள்வோம்..!

SBI Bank WhatsApp Number in Tamil:

sbi bank whatsapp number in tamil

மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான SBI வங்கி வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் வாட்ஸ்அப் மூலம் அந்த வங்கிக்கு ஒரு குறுச்செய்தி அனுப்ப வேண்டும். முக்கியமாக உங்களுடைய போன் நம்பர் வங்கியில் கொடுத்திருக்க வேண்டும். அதன் பின் உங்களுடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். குறுச்செய்தியானது இந்த போன் நம்பருக்கு 90226 90226 அனுப்ப வேண்டும்.

இன்னும் வாட்ஸ்அப் பற்றி தெரிந்துகொள்ள ⇒ டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

HDFC Bank WhatsApp Banking Number in Tamil:

HDFC வங்கியில் நீங்கள் பயன்படுத்தும் போன் நம்பர் கொடுக்க வேண்டும். அதிலிருந்து hi என்ற செய்தி அனுப்பினால் மட்டுமே உங்களுக்கு அதற்கான பதிவில் வங்கியிலிருந்து கிடைக்கும். இந்த சேவையானது வாரத்தில் 7 நாட்களும் கிடைக்கலாம். அதேபோல் HDFC வங்கிக்கு 70700 22222 இந்த நம்பருக்கு அனுப்பவேண்டும்.

ICICI Bank WhatsApp Banking Number in Tamil:

ICICI வங்கியில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த சேவையானது வருடத்தில் 365 நாட்களுமே சேவை அளிக்கிறது. இனிமேல் வங்கிகளுக்கு நேரடியாக சென்று எந்த ஒரு செய்தியையும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை உங்களுடைய போன் மூலம் தெரிந்துகொள்ளலாம். 8640086400 hi என்ற குறுந்செய்தி அனுப்பிவிட்டு அதன் மூலமே கடன் தொகை வேண்டும் என விண்ணப்பிக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து.

Bank of Baroda WhatsApp Banking Number in Tamil:

8433 888 777 இந்த நம்பருக்கு ஒரு sms அனுப்பினால் அது உங்களுக்கு பதில் அளிப்பார்கள் அதன் மூலம் உங்களுக்கு தேவையான செய்தியை பெற்றுக்கொள்ள முடியும்.

Axis WhatsApp Banking Number in Tamil:

1860 419 5555 இந்த நம்பருக்கு உங்களுடைய போனிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் மெஸ்ஜ் அனுப்பினால் உங்களுக்கு தேவையான செய்தியை அளிப்பார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News