வாட்சப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா.! ஒரு கல்லில் இரண்டு மாங்கானா இதானா.!

Hide WhatsApp Status Seen in Tamil

Hide WhatsApp Status Seen in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் வாட்சப்பில்  ஒரு அருமையான பதிவு பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பெரும்பாலும் இப்பொழுது வாட்சப்பில்  பயனாளர்களை மகிழ்விக்கும் அளவில் அதிகமான சிறப்பு அம்சங்கள் செட்டிங்ஸ் இல் புதைந்து கிடைக்கின்றன. ஆனால் அதை நாம் தெரிந்து கொள்ளாமலேயே இன்றும் உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும், அதற்கு  தகுந்தது போலத்தான் இருக்கும் இன்று நாம் தெரிந்துகொள்ளபோகின்ற செட்டிங்ஸ், மேலும் அவற்றை பற்றி நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

Whatsapp- யில் இது தெரியாமல், யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா.?

Whatsapp Setting to Hide Status Seen in Tamil:

இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பதிவு என்னவென்றால், ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால்,  நீங்கள் உங்களுடைய நண்பர்களிடம் சண்டை போட்டு இருந்துருப்பீர்கள், ஆனால் அவர்களுடைய ஸ்டேட்டஸை பார்க்கவேண்டும் என்று ஆர்வம் தேன்றும், ஆனால் அவர்களுக்கு நாம் ஸ்டேட்டஸ் பார்த்த Views  காட்டக் கூடாது, என்பதற்காக பலவிதமான ஆப்களை ஏற்றி பார்ப்போம் அல்லவா, இனிமேல் அந்த அவசியம் இருக்காது, உங்களுடைய Whatsapp -லே அந்த செட்டிங்ஸை செய்யலாம். அதோடு மட்டுமின்றி அதில் இன்னொரு அம்சமும்  இருக்கின்றது, அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், பதிவை கடைசி வரையும் பாருங்கள்.  இப்பொழுது அந்த ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

ஸ்டேப்:1

 whatsapp setting to hide status seen in tamil

முதலில் உங்களுடைய Whatsapp ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள.  அடுத்ததாக  Whatsapp ஆப் ஓப்பன் ஆனதும் calls  -க்கு மேல் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து கொள்ளுங்கள். அந்த மூன்று புள்ளிகளை கிளிக் செய்ததும் New Group, New Broadcast, Linked Devices, Starred Messages, Payments, Settings என்று இருக்கும். இதில் Settings என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். 

ஸ்டேப்:2

 whatsapp setting to hide status seen in tamil

Settings என்பதை கிளிக் செய்ததும், ஒரு பேஜ் ஓப்பன் ஆகும்,  அதில் Account -க்கு அடுத்ததாக இருக்கும் Privacy என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். 

ஸ்டேப்: 3

 whatsapp setting to hide status seen in tamil

Privacy என்பதை கிளிக் செய்ததும், உங்களுக்கு இன்னொரு பேஜ் ஓப்பன் ஆகும். அதில் Last Seen and Online, Profile Photo, About, Status, Read Receipts என்று இருக்கும். அதில் நீங்கள் Read Receipts  என்று பக்கத்தில் ஒரு On, Off பட்டன் போல இருக்கும், அதை நீங்கள் Off செய்து வைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் யாருடைய ஸ்டேட்டஸ் பார்த்தாலும், அவர்களுக்கு நீங்கள் பார்த்தது போல Views  காட்டாது. 

அதோடு மட்டுமின்றி, உங்களுக்கு யாரவது மெசேஜ் செய்தாலும், அதை நீங்கள்  படித்தாலும் அவர்களுக்கு Blue tick காட்டாது. அப்பொழுது அவர்கள் இன்னும் மெசேஜ் பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள். மேலும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், நீங்களும் உடனே செய்து பாருங்கள்.

இதையும் பாருங்கள் 👇

எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?
வாட்ஸ் அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News