யூடியூப் வீடியோக்களை இனி வாட்ஸ்அப்பில் காணமுடியும்..!

Advertisement

யூடியூப் வீடியோக்களை இனி வாட்ஸ்அப்பில் காணமுடியும்..!

whatsapp பக்கத்தில் இருந்து கொண்டே யூடியூப் வீடியோக்களை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் செயலி:

வாட்ஸ்அப் செயலி அனைவரிடத்திலும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் அனைவரது கைகளிலும் வாட்ஸ் அப் இல்லாமல் நம்மால் பார்க்க இயலாது.

வர்த்தகம், தொழில் என அனைத்தையும் எளிதில் முடிக்க ஏதுவாக வாட்ஸ் அப் நிறைய வசதிகளை செய்து தந்துள்ளது.

வாட்ஸ்அப்:

இதுவரை வாட்ஸ் அப் குறுஞ்செய்தி, போட்டோ மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து புதுப்புது அப்டேட்களை (whatsapp update) அள்ளி வழங்க ஆரம்பித்துவிட்டது. வாட்ஸ் அப் மூலம் ஒரு நாளைக்கு 6 கோடியே 50 லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டிக்கர்ஸ், ஸ்டேடஸில் வீடியோ, போட்டோ என வித்தியாசமாக அப்டேட்களை வழங்கியது.

இந்நிலையில் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பார்க்கலாம். லிங்கை கிளிக் செய்தவுடன் வாட்ஸ்அப்பிலே பிளே ஆகும்.

லிங்கிற்கு மேலே அதனுடைய வீடியோ பிளே ஆகும். விடியோக்களை பார்த்துக்கொண்டே சேட் செய்ய முடியும். இது போன்ற புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்களில் வெளிவந்துள்ளது.

விரைவில் இந்த வசதி அனைவரது வாட்ஸ் அப்களிலும் அப்டேட் (whatsapp update) ஆகும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பயனர்களை வாட்ஸ் அப்யை விட்டு பிற சமூக வலைதளங்களுக்கு செல்லவிடாமல் தனக்குள் வைத்து கொள்ளவிருக்கிறது. இதன் காரணத்தாலே இப்படி ஒரு புதிய அப்டேட்!

 

மேலும் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement