உங்க போனில் WiFi இருக்கா..? அப்போ இந்த Settings பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

WiFi Connection Settings in Tamil

ஹலோ நண்பர்களே… இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் கூற போகிறேன். அதனால் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். WiFi என்றால் என்ன என்று ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு தெரியும். அதாவது நம் போனில் டேட்டா இல்லாத போது மற்றவரின் போனில் இருந்து WiFi -யை பயன்படுத்தி டேட்டாவை பகிர்ந்து கொள்ள முடியும். அப்படி நாம் பயன்படுத்தும் WiFi -யை ON செய்வதற்கு முன் இந்த Settings பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Password இல்லாமல் ஈஸியா WiFi Connect செய்வது எப்படி?

WiFi Settings in Tamil: 

Settings -1 

About Phone

முதலில் உங்களுடைய போனில் Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் கீழே சென்றால் About Phone என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Build Number

பின் அதில் Software Information என்ற ஆப்ஷனில் Build Number என்ற ஆப்சன் இருக்கும் அதை 7 முறை கிளிக் செய்ய வேண்டும்.

Developer Option

பிறகு அதேபோல் Settings உள்ளே Developer Option என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Wi-Fi Scan Throttling

அதில் Network என்பதன் கீழ்  Wi-Fi Scan Throttling  என்ற ஆப்சன் இருக்கும். அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.

 இப்படி செய்வதன் மூலம் நீங்கள் Wi-Fi பயன்படுத்தும் போதும் உங்களுடைய போன் Battery பாதுகாப்பாக இருக்கும். அதேபோல உங்களுடைய போனில் Network அதிகரிப்பதற்கும் வசதியாக இருக்கும்.  
QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி?

Settings -2

Wi-Fi Control

அடுத்து உங்களுடைய போன் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Wi-Fi Control என்ற ஆப்ஷனை Type செய்து அதை கிளிக் வேண்டும்.

பின் அதில் சில ஆப்சன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கடைசியாக Wi-Fi Control என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.

Not Allowed

அதில் உங்களுடைய போனில் இருக்கும் ஆப் எல்லாம் Allowed செய்யப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு எந்த ஆப் வேண்டாமோ அதை நீங்கள் Not Allowed செய்து கொள்ளலாம்.

உதாரணமாக, Facebook என்ற ஆப் Allowed செய்யப்பட்டிருந்தால் அதை நீங்கள் Not Allowed செய்து கொள்ளலாம். 

 இப்படி செய்வதால், தேவையில்லாத ஆப் உங்களுடைய Wi-Fi டேட்டாவை திருடுவதை தடுக்க முடியும். அதேபோல இது Wi-Fi பயன்படுத்தும் போது Not Allowed செய்த ஆப் எல்லாம் டேட்டாவை பயன்படுத்த முடியாது.  
வைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Funny Wifi Names in Tamil

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement