செம்பருத்தி பூ பயன்கள்
செம்பருத்தி செடி பலரின் வீட்டில் இருக்கிறது. இதில் மருத்துவ குணங்கள் ஏராளமாக இருக்கிறது. செம்பருத்தி செடியில் உள்ள இலைகளை அரைத்து தலையில் தடவினால் தலை முடி அதிகமாக வளரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நம் முன்னோர்கள் காலையிலே பெண்களை வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்களை பறித்து சாப்பிடு என்று சொல்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
இரத்த சோகை:
பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையிலிருந்து விடுபட செம்பருத்தி பூக்களை சாப்பிடலாம். மேலும் உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை தடுக்கும் குணம் உடையது.
உடல் எடை குறைய:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்களை பறித்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் செம்பருத்தி இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட டீயை குடித்து வந்தாலும் உடல் எடையை குறைக்க முடியம்.அழகுக்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி பூ… இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரியுமா..?
இரத்த அழுத்தம்:
பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து விடுபட செம்பருத்தி பூக்கள் சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு செம்பருத்தி பூக்களை பறித்து காலையில் சாப்பிட வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
செம்பருத்தி பூக்களில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
முகம் பளபளப்பாக:
செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் முகத்தை பளபளப்பாகவும், சரும பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்கும். முகம் பளபளப்பாக இருக்க செம்பருத்தி பூக்களை தினமும் சாப்பிட வேண்டும்.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது:
நம் உடலில் சூரிய ஒளி அதிகமாக பட்டால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் ந ம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு செம்பருத்தி பூ உதவியாக இருக்கிறது. செம்பருத்தி பூக்களை பறித்து அரைத்து விட்டு அதிலுள்ள சாற்றை மட்டும் எடுத்து தினமும் குடித்து வந்தால் சரும பிரச்சனைகளிலுருந்து விடுபடலாம்.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |