அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை பயன்கள் | Aluminium Hydroxide Tablet Uses in Tamil

Aluminium Hydroxide Tablet Uses in Tamil

அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் 

Aluminium Hydroxide Tablet Uses in Tamil: நம் உடம்பில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு மருந்து அல்லது மாத்திரை எடுத்து கொள்வது  வழக்கம். அப்படி நாம் எடுத்து கொள்ளும் மாத்திரை அல்லது மருந்து எதற்காக பயன்படுகிறது, அதை சாப்பிட்டால் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை எதற்கு பயன்படுகிறது, அதை பயன்படுத்துவதால் எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை பயன்கள் – Aluminium Hydroxide Tablet Uses in Tamil:

Aluminium Hydroxide Tablet Uses in Tamil

 • நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்காக இந்த மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 • செரிமான கோளாறு, வயிற்று புண், குடல் புண் போன்றவற்றை சரி செய்ய இந்த மாத்திரை பயன்படுகிறது.
 • வயிற்றில் ஏற்படும் அதிகமான அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது.
அல்பெண்டசோல் மாத்திரை பயன்பாடுகள்

அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை பக்க விளைவுகள் – Aluminium Hydroxide Tablet in Tamil:

 • மலச்சிக்கல், பசியிழப்பு போன்ற உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • உடல் சோர்வு, தசை பலவீனம், மனதில் குழப்ப உணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • இந்த மாத்திரை சாப்பிடுவதால் பெரிதான பாதிப்புகள் இல்லையெனினும் மேற்கூறப்பட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை யார் சாப்பிடலாம்? யார் எடுத்து கொள்ள கூடாது:

 • கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரை பயன்படுத்த வேண்டாம். அப்படி உபயோகப்படுத்துவதாக இருந்தாலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
 • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் அறிவுரையை கேட்டு பின்னர் பயன்படுத்தலாம்.
 • மது அருந்திவிட்டு அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரையை சாப்பிட கூடாது.
 • அப்பெண்டிக்ஸ் (appendix operation) செய்தவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
ஏவியான் 400 மாத்திரை பயன்பாடுகள்
 • பிற நோய்களுக்காக வேறு ஏதேனும் மருந்து உட்கொள்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.
 • மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை இரண்டு வாரங்களுக்கு மேல் சாப்பிட கூடாது. அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரையை சாப்பாட்டுக்கு பிறகு எடுத்து கொள்வது சிறந்தது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து