Asthakind LS மருந்தினை பயன்படுத்துவத்தற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Asthakind LS Syrup Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் அவற்றை குணப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்பொழுது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் நீங்கள் அருகில் உள்ள மருந்துக்கடையில் சென்று மருந்து வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால் அதனை பயன்படுத்துவதற்கு முன்னால் அந்த மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக இன்றைய சூழலில் ஒரே பெயரில் அல்லது ஒரே மூலப்பொருட்களில் பலவகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றது. எனவே மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதனால் தான் இன்றைய பதிவில் Asthakind LS Syrup பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Febrex Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Asthakind LS Syrup Uses in Tamil:

Asthakind LS Syrup Side Effects in Tamil

இந்த Asthakind LS Syrup மருந்து கடுமையான சளி மற்றும் கடுமையான சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றது. இது ஒரு அமைப்புரீதியாக செயல்படும் மியூகோலிடிக் காரணி ஆகும்.

மேலும் இது நுரையீரலில் உள்ள சளியின் கட்டமைப்பை உடைப்பதன் மூலம் செயல்படுகிறது. இது வாய்வழி உட்கொள்ளும் கரைசல் மற்றும் மாத்திரை வடிவத்தில் கிடைக்கின்றது.

இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவை தவிர அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொண்டால் இது பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.

Asthakind LS Syrup Side Effects in Tamil:

  1. குமட்டல்
  2. வாந்தி
  3. வயிற்றுப்போக்கு
  4. வயிற்று வலி
  5. செரிமான கோளாறுகள்
  6. சோர்வு 
  7. தலைசுற்றுதல் 
  8. தலைவலி

Asthakind LS Syrup மருந்து நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Nicip Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்

முன்னெச்சரிக்கை:

மேலும் இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

நீங்கள் தாய்ப்பால் அளிக்கும் தாய்மாராக இருந்தால் இந்த மருந்தினை கண்டிப்பாக எடுத்து கொள்ளக்கூடாது.

மேலும் நீங்கள் 12 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவராக இருந்தால் இந்த மருந்தை எடுத்து கொள்ளக்கூடாது.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Bandy Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement