சிப்லர் 10 மிகி மாத்திரை பயன்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் சிப்லர் மாத்திரையின் பயன்களும் அதன் பக்க விளைவுகளும் பற்றி தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக மனிதர்கள் தன்னுடைய நோய் என்னவென்று அறியாமலே மருந்தகத்திற்கு சென்று மாத்திரையை உபயோகிக்கிறார்கள். அதன் பிறகு அதன் பக்கவிளைவுகளையும் அனுபவித்து வருகிறார்கள். முதலில் தனக்கு உடலில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு தான் மாத்திரையை உபயோகிப்பது நல்லது. அதுமட்டுமில்லாமல் நோயாளிகளின் வயது மற்றும் உடல் அமைப்பை பொறுத்து மருந்தளவு மாறுபடும். மேலும் இந்த சிப்லர் மாத்திரையின் பயன்களையும் அதன் பக்க விளைவுகளையும் காண்போம்.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் |
சிப்லர் 10 மிகி மாத்திரையின் பயன்கள் :
- இந்த மாத்திரை ஆனது உயர் இரத்த அழுத்தம், நெஞ்சுவலி, சீரற்ற இதயத்துடிப்பு, ஒற்றைத் தலைவலி, மாரடைப்பு, பதட்டம் போன்றவற்றை தடுப்பதற்கு இந்த மாத்திரை பயன்படுகிறது.
- சிப்லர் மாத்திரை ஏற்புத்திசுக்களை தூண்டுவதற்கு அதனுடைய மூலக்கூறுகளை தடுக்கிறது.
- இந்த மாத்திரரையை உபயோகிக்கும் பொழுது பீட்டா அட்ரினெர்ஜிக் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதயத்தின் துடிப்பை குறைத்து, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
- சிப்லர் மாத்திரை இதயத்தில் வேலை செய்யும் பீட்டா தடுப்பு ஆகும்.
- இந்த மாத்திரை இதயம் மட்டுமில்லாமல் பிற உறுப்புகளான நுரையீரல், கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- சிப்லர் மாத்திரை ஏற்ப்புத்திசுக்களை தடுப்பதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் குறைக்கிறது.
- சிப்லர் மாத்திரை உயர் இரத்த அழுத்தம், தலைவலி, பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்க்கான வாய்ப்புகளையும் சரிசெய்கின்றது.
- இந்த சிப்லர் மாத்திரையானது பதற்றம், நடுக்கம், அதிகமாக வியர்த்தல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.
- இந்த சிப்லர் மாத்திரையானது இன்ஹேலரகவும், காப்ஸ்யூகலாகவும் இரண்டு விதமாக கிடைக்கிறது.
- சிப்லர் மருந்தை எடுத்து கொள்ளும்பொழுது சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த சிப்லர் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் பொழுது கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்ளவது நல்லது.
- அதுமட்டும்மில்லாமல் நீரிழுவு நோய், ஆஸ்துமா, சொரியாசிஸ், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற பிரச்சனை பாதிக்கப்பட்டு இருந்தால் மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
சிப்லர் மாத்திரையின் பக்கவிளைவுகள்:
- சிப்லர் மாத்திரை ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை அதிகம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே இது அனைவருக்கும் உகந்ததாக இருக்காது.
- இந்த சிப்லர் மாத்திரையை உபயோகிப்பதன் மூலம் ஒவ்வாமை, முகம் வீக்கம், படைநோய் மற்றும் நாக்கு, தொண்டை வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதே ஆகும்.
- சிப்லர் மாத்திரை உபயோகித்து வரும்போது சிலருக்கு குமட்டல், வாந்தி, தலைசுற்றல், சோர்வு, வயிற்று போக்கு, போன்ற விளைவுகள் ஏற்படும்.
- பிறகு மாத்திரையை உபயோகித்த பிறகு கைகளில் வீக்கமும் குறைந்த இதயத் துடிப்பு ஏற்பட்டு சிறிய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
- மலச்சிக்கல், நிலையில்லா உணர்வு, அஜீரணம், வாய்ப்புண், நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
- மஞ்சள் காமாலை, கல்லீரலில் வீக்கம், மூச்சி விடுவதில் சிரமம், குறைந்த சர்க்கரை அளவு, போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
- வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மது அருந்துதல், போதை பொருள் எடுத்துக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது சிப்லர் உபயோகிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
- மூலையில் கட்டி அல்லது காயம் இருக்கும் போது சிப்லர் உபயோகித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு உபகோகிப்பது நல்லது.
- இந்த மாத்திரையின் விளைவை 1 மணி நேரத்திற்குள் காணமுடியும். அதுமட்டுமில்லாமல் இந்த மாத்திரையின் தாக்கம் சுமார் 9 மணி நேரம்வரை நீடிக்கும்.
- 60 வயத்திற்கு மேற்பட்ட பெரியவர்கள் சிப்லர் உபயோகித்தால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு:
எந்த ஒரு மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாகவே மருந்து சாப்பிட கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |