காம்பிஃப்லாம் மாத்திரை பயன்பாடுகள் | Combiflam Tablet Uses in Tamil

Combiflam Tablet Uses in Tamil

கொம்பிஃபிளம் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Combiflam Tablet Uses in Tamil

Combiflam Tablet Uses in Tamil: வணக்கம் நன்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கொம்பிஃபிளம் மாத்திரை பயன்பாடுகள் பற்றி பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடம்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் நாம் எடுத்து கொள்ளும் முதல் மருந்து மாத்திரை தான். எந்த மாத்திரை பயன்படுத்தினாலும் அந்த மாத்திரை பற்றிய பொதுவான தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் கொம்பிஃபிளம் மாத்திரை எதற்கு பயன்படுகிறது, அந்த மாத்திரையை பயன்படுத்துவதால் என்ன பக்க விளைவுகள் வரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

கொம்பிஃபிளம் மாத்திரை பயன்பாடுகள் – Combiflam Tablet Uses in Tamil:

combiflam tablet uses in tamil

 • இந்த மாத்திரை பொதுவாக அனைத்து உடல் வலிக்கும் பயன்படுகிறது. இதில் Ibuprofen மற்றும் Paracetamol போன்ற இரண்டு வகையான மருந்துகள் இதில் உள்ளன.
 • Paracetamol மருந்து இருப்பதால் காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது.
 • பல் வலி, Cephalalgia, Febrility, காது வலி, மூட்டு வலி, முதுகு வலி, நரம்பு வலி, உடல் வலி, தலை வலி, தசை வலி, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, முடக்குவாதம் என உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் குணப்படுத்த உதவுகிறது.

கொம்பிஃபிளம் மாத்திரை பக்க விளைவுகள் – Combiflam Tablet Side Effects in Tamil – Combiflam Side Effects

 • நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • அல்சர் உள்ளவர்களுக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மலச்சிக்கல், சிறுநீரக பிரச்சனைகள், தோல் சிவந்து போவது, வயிற்று எரிச்சல், இரத்த அழுத்தம் உயர்வு போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மூச்சு திணறல், வீக்கம், தோல் வெடிப்பு, கல்லிரல் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • வயிற்று கோளாறு, ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பக்க விளைவுகள் அனைவருக்கும் வருவதில்லை ஒரு சிலருக்கு மற்றும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

கொம்பிஃபிளம் மாத்திரை யார் சாப்பிடலாம் மற்றும் யார் சாப்பிடக் கூடாது – Combiflam Tablet Uses in Tamil:

 • மது அருந்துபவர்கள் இந்த மாத்திரயை சாப்பிட கூடாது.
 • கிட்னி சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையை கேட்டு பின்னர் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
 • லிவர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
 • குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளலாம், இருப்பினும் மருத்துவரை பரிந்துரைத்து விட்டு பின்னர் எடுத்து கொள்வது சிறந்தது.
 • வாகனம் ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது இந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம்.
 • இந்த மாத்திரையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், எவ்வளவு நாள் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு அவர் கொடுக்கும் அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்.
செதிரிசின் மாத்திரை பயன்கள் | Cetirizine Tablet Uses in Tamil 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil