டோலோ 650 பயன்பாடுகள் | Paracetamol Dolo 650 Uses in Tamil
Dolo 650 Tablet Uses in Tamil:- மருந்து என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத்துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. உடலில் ஏற்படும் நோய்கள் குணமாக மற்றும் நோய் வராமல் தடுக்க மாத்திரைகளை நாம் எடுத்து கொண்டாலும். அதனுடைய நன்மை மற்றும் தீமைகளை பற்றி நாம் தெறித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒரு விஷயம். ஆகவே இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு இந்த பதிவில் டோலோ 650 மாத்திரையின் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகளை பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
Dolo 650 Tablet Uses in Tamil
டோலோ 650 மாத்திரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
டோலோ 650 மாத்திரை (Dolo 650 Tablet), லேசான வலி நிவாரணி என்று வகைப்படுத்தப்படுகிறது, அதாவது காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும்.
குறிப்பாக முதுகுவலி, தலைவலி, குளிர், மூட்டுவலி, பல் வலி காது வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி போன்ற உடல் உபாதைகள் வந்தால் வலியைத் தணிக்க இந்த டோலோ 650 மாத்திரை (Dolo 650 Tablet) பயன்படுகிறது. காய்ச்சல் காரணமாக உடலில் ஏற்படும் வலியை குறைக்கிறது.
புற்றுநோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு அல்லது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் வலியை சமாளிக்க உதவும் வகையில் இது பெரும்பாலும் அளிக்கப்படுகிறது.
செதிரிசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil:
டோலோ 650 மாத்திரை (Dolo 650 Tablet) என்பது பாராசிட்டமோல் (Paracetamol) மாத்திரை வடிவிடிலும் கிடைக்கிறது. சரி இதன் பயன்பாடுகளை பற்றி பார்க்கலாம்.
காய்ச்சலில் இருந்து தற்காலிக நிவாரணம் வழங்க டோலோ 650 மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
ஒற்றைத்தலைவலி உட்பட கடுமையான தலைவலியைத் தணிக்க டோலோ 650 மாத்திரையை பயன்படுத்தலாம்.
தசைகளில் லேசானது முதல் மிதமான வலியை தணிக்க டோலோ 650 மாத்திரையை பயன்படுத்தலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடைய வலியையும், தசைப்பிடிப்புக்களையும் தணிக்க இந்த டோலோ 650 மாத்திரையை பயன்படுத்தலாம்.
ஒருவருக்கு தடுப்பூசிகள் போட்ட பிறகு ஏற்படும் வலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்த இந்த டோலோ 650 மாத்திரையை பயன்படுத்தலாம்.
கீல்வாதம் உள்ளபோது லேசானது முதல் மிதமான வலியுடன் கூடிய மூட்டு வலியை தணிக்க டோலோ 650 மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை பயன்கள் |
யாரெல்லாம் இந்த டோலோ 650 மாத்திரை எடுத்துக்கொள்ளக்கூடாது:
- உடலில் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த டோலோ 650 மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.
- நீங்கள் தீவிரமான கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த டோலோ 650 மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.
- மது பானங்களை உட்கொண்டால் இந்த டோலோ 650 மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.
டோலோ 650 மாத்திரை பக்க விளைவுகள் என்னென்ன?
டோலோ 650 மாத்திரை (Dolo 650 Tablet) மருந்துக்கு எந்த ஒரு கடுமையான பக்க விளைவுகளும் இல்லை. ஆனால் கீழ் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் சாத்தியமான ஒன்று தான், இருப்பினும் எப்போதும் ஏற்படுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
- நோய் உணர்வு
- கல்லீரல் சேதம்
- ஒவ்வாமை எதிர்வினைகள்
- குமட்டல்
- மூச்சு திணறல்
- தடித்தல்
- முக வீக்கம்
- தோல் சிவப்பாக்குதல்
- ஒவ்வாமை
- தீவிரமான சிறுநீரகச் குழாய் நசிவு
- இரத்த டிஸ்க்ரேசியாஸ் (Blood Dyscrasia)
- இரத்த அணுக்கள் இயல்பு
- கல்லீரல் நச்சுதன்மை
- குறைவான வெள்ளை இரத்த அணுக்கள்
பெப்லக்ஸ் ஃபோர்ட் மாத்திரை பயன்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |