Letrozole Tablet Uses in Tamil
வணக்கம் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுகின்றோம். மருத்துவரும் அந்த பிரச்சனைக்கு சில மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்கின்றன. இருப்பினும் நாம் அந்த மருந்து மாத்திரைக்கான பயன்பாடுகள் என்ன? மற்றும் அதனை எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி நாம் தெரிந்து கொள்வது ஒன்றும் தப்பு இல்லை. அந்த வகையில் நீங்கள் லெட்ரோஸ் மாத்திரை எடுத்துக் கொள்கின்றீர் என்றால் அதன் பயன்கள் மற்றும் அதனை எடுத்து கொள்வதன் மூலம் சில சமயங்கள் நம் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
யாரெல்லாம் இந்த லெட்ரோஸ் மாத்திரை எடுத்துக்கொள்ள கூடாது?
- கர்ப்பிணி பெண்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.
மாத்திரையின் அளவு:
- பொதுவாக 18 வயதானோருக்கான மருந்தளவு மார்பக புற்றுநோய் சிகிச்சையின் போது நாளுக்கு ஒரு முறை சுமார் 2.5 மி.கி ஆகும்.
- மருந்தின் அளவு அதிகமாக எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவசரகால மருத்துவ சிகிச்சையை நாடவும் அல்லது மருத்துவரை அணுகவும்.
லெட்ரோஸ் பயன்பாடுகள் – Letrozole Tablet Uses in Tamil:
- இந்த லெட்ரோஸ் மாத்திரை மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
- உடலில் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் இந்த லெத்ரோஸ் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் |
லெட்ரோஸ் 2.5 மிகி மாத்திரை பக்க விளைவுகள் – Letrozole Tablet Side Effects in Tamil:
- தலைச்சுற்றல்
- தலைவலி
- அதிகரித்த வியர்வை
- முதுகு வலி
- மலச்சிக்கல்
- மன அழுத்தம்
- சிறுநீர் பாதை நோய் தொற்று
- எலும்பு வலி
- சுடு தன்மையுடன் சிவந்துபோதல்
- குமட்டல் அல்லது வாந்தி
- முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல்
இது போன்று பல பக்க விளைவுகளை இந்த மாத்திரை ஏற்படுத்தும். மேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |