லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் | Livogen Tablet Uses in Tamil

லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் | Livogen Uses in Tamil

நம் உடம்பில் எந்த சத்து குறைவாக இருந்தாலும் கண்டிப்பாக நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதில் முக்கியமாக மற்றும் அத்தியவசியமாக உடம்பில் இருக்க வேண்டியது இரும்பு சத்து. உடம்பில் இரும்பு சத்து அளவு குறைவாக இருந்தால் ரத்தசோகை, உடலில் ஆற்றல் குறைந்து சோர்வாக மற்றும் பலவீனமாக காணப்படுவீர்கள். இரும்பு சத்து அதிகரிப்பதற்காக நாம் மாத்திரை எடுத்து கொள்வோம். அந்த வகையில் லிவோஜன் மாத்திரை இரும்பு சத்து அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அப்படிப்பட்ட மாத்திரை சப்பிடுவதால் வரும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அந்த மாத்திரை பற்றி இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

லிவோஜென் மாத்திரை நன்மைகள் –  Livogen Tablet Uses in Tamil – லிவோஜென் மாத்திரை பயன்படுத்துகிறது:

livogen tablet uses in tamil

 • லிவோஜென் மாத்திரை அல்லது அயன் மாத்திரை என்றும் சொல்லலாம். இதை நாம் மாத்திரையாக அல்லது ஊசியாக எடுத்துக்கொள்ளலாம்.
 • உடம்புக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை ரத்த சிவப்பணுக்கள் எடுத்து செல்லாமல் இருப்பதால் ரத்த சோகை ஏற்படுகிறது. இந்த மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் உடம்பிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
 • இரும்பு சத்து குறைவால் ஏற்படும் மூளை நோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இந்த RBC செல்கள் அதிகரிப்பதால் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜனை எடுத்து சென்று ரத்த சோகையால் ஏற்படும் பல நோய்களை தடுக்க உதவுகிறது.

Livogen Tablet Uses in Tamil:

 • Anemia-ஆல் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தை குறைத்து உடலை சுறுசுறுப்பாக இருக்க பயன்படுகிறது.
 • ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, ஃபோலிக் அமில பற்றாக்குறை மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
 • பெண்களுக்கு இந்த மாத்திரை மிகவும் பயன்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கின் காரணமாக உடல் சோர்ந்து காணப்படும். பெண்களுக்கு ரத்த அளவை அதிகரிக்கவும் மற்றும் புதிய ரத்தம் உருவாகவும் பயன்படுகிறது.
 • மகப்பேறு அடைவதற்கு இந்த மாத்திரை பயன்படுகிறது.
 • இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் இறைச்சி, முட்டை, ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்து கொண்டால் இயற்கையாக உடம்பில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
செதிரிசின் மாத்திரை பயன்கள் | Cetirizine Tablet Uses in Tamil 

லிவோஜன் மாத்திரை பக்க விளைவுகள்:

 1. இந்த மாத்திரையை சாப்பிடுவதால் வாந்தி
 2. குமட்டல்
 3. வயிற்றுபோக்கு
 4. மலச்சிக்கல்
 5. டார்க் அல்லது பச்சை மலம்
 6. பசியிழப்பு
 7. அழற்சி
 8. அரிப்பு
 9. தோல் சிவந்து போதல்
 10. வீக்கம். இது போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • இதை தவிர வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
 • ஒரு சிலருக்கு லிவோஜெனை மாத்திரையாக எடுத்து கொண்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்காமல் போகலாம். அப்படிபட்டவர்களுக்கு மருத்துவர்கள் அந்த மருந்தை ஊசி மூலம் செலுத்துகின்றனர்.

லிவோஜன் மாத்திரை யார் சாப்பிடலாம் மற்றும் யார் சாப்பிடக் கூடாது:

 • உடம்பில் ரத்த அளவு குறைவாக உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
 • மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.
 • மாதவிடாய் தாமதமாக வரும் பெண்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
 • இந்த மாத்திரையை எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவரை ஆலோசித்த பின்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் அறிவுரை இல்லாமல் நீங்களாகவே எந்த மாத்திரையையும் சாப்பிட வேண்டாம்.
 • மது பிரியர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்.
டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil
ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் | Zincovit Tablet Uses in Tamil

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil