ஒமபிரசோல் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகள்..!

Omeprazole Tablet Uses in Tamil

Omeprazole Tablet Uses in Tamil

வணக்கம் நண்பர்களே.. உலகில் பல நிறுவனங்கள் பல பெயர்களில் விற்பனை செய்து வரும் ஒமபிரசோல் மாத்திரையின் பயன்பாடுகள் என்னென்ன, பக்க விளைவுகள் என்னென்ன, ஒமபிரசோல் மாத்திரை நாம் எடுத்து கொண்டதுக்கு பிறகு எப்படி வேலை செய்கிறது என்பதையும், இந்த மாத்திரையை நாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றியும், எப்பொழுது சாப்பிட வேண்டும், எந்த அளவிற்கு சாப்பிட வேண்டும் என்பதை பற்றியும், எந்த மாதிரியான நோய்களுக்கு இந்த மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

ஒமபிரசோல் மாத்திரை பயன்பாடுகள் – Omeprazole Tablet Uses in Tamil:

  1. இந்த ஒமபிரசோல் மாத்திரை இரைப்பையில் அமிலத்தன்மை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
  2. இந்த மருந்து சிறுநீர்ப்பை புண் அல்லது இரைப்பை புண், கேஸ்ட்ரோ ஈஸோபாகல் நோய் (GERD), வீக்கம் உணவுக் குழாய் மற்றும் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பது போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
  3. நெஞ்செரிச்சல் பிரச்சனையை குணப்படுத்த இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
  4. அல்சர் நோயை குணப்படுத்த இந்த ஒமேப்ரஸோல் 20 மிகி காப்ஸ்யூல் பயன்படுகிறது.
  5. வயிற்று புண் மற்றும் குடல் புண்களை குணப்படுத்த இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
  6. இந்த மருந்து பாக்டீரியா ஹெலிக்கோபாக்டர் பைலோரி மூலம் ஏற்படும் அனைத்து தொற்றுகளையும் குணப்படுத்துவதில் வல்லது.

பக்கவிளைவுகள் – Omeprazole Tablet Side Effects in Tamil :

ஒமேப்ரஸோல் 20 மிகி காப்ஸ்யூல் (Omeprazole 20 MG Capsule) உடன் தொடர்புடைய மிகவும் பொதுவான பக்கவிளைவுகள் பற்றி கீழ் காண்போம்.

  • வயிற்றுப்போக்கு, வாயு, வாந்தி, தலைவலி, குமட்டல், மற்றும் வயிறு வலி போன்றவை ஆகும்.
  • குடல் மற்றும் வயிறு உட்புறமாக வீக்கங்கள், சிறுநீரகங்களில் பாதிப்பு, ஒவ்வாமை எதிர்வினைகள், எடை குறைதல், காய்ச்சல், தலை வலி, பசியிழப்பு, மலச்சிக்கல், தொண்டை வலி, தலைசுற்றல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை ஆகும்.
  • அரிதான, சில கடுமையான எதிர்மறை எதிர்வினைகளாக எலும்பு முறிவுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளது, உடலின் உள்ளே மெக்னீசியம் அளவுகள் குறைதல், வலிப்பு, சீரற்ற இதய-துடிப்பு, நடுக்கம், தசைப்பிடிப்பு மற்றும் பலவீனம், பாதங்கள்/கை பிடிப்புகள், குரல்வளை பிடிப்பு, இன்னபிற இது போன்ற கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
  • இந்த மருந்தை 3 மாத காலத்திற்கு மேல் எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் இன்னும் அதிகமாகும். மேலும், இந்த மருந்தை நீண்ட நாட்கள் உட்கொள்ளுதல் (பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக) உங்கள் உடலின் வைட்டமின் B12 அளவை குறைக்கும்.
    • அதன் அறிகுறிகளில் சில:  நரம்பு அழற்சி, நரம்புத்தளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், சீரில்லா தசை ஒருங்கிணைப்பு, கூச்ச உணர்வு அல்லது பாதங்கள் மற்றும் கைகளில் மரத்துபோதல் உணர்வு முதலியனவை ஆகும்.

மாத்திரையளவு (omeprazole tablet uses in tamil):

  • முடிந்தவரை சீக்கிரமாக தவறவிட்ட மருந்தை எடுத்துக்கொள்ளவும். அடுத்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டால், மருந்தை தவிர்த்துவிட்டு வழக்கமான அட்டவணையைப் பின்பற்றவும்.
  • அதிகமாக மருந்து எடுத்துக்கொண்டால் அவசர மருத்துவ சிகிச்சையை நாடுங்கள் அல்லது மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

யாரெல்லாம் இந்த ஒமேப்ரஸோல் 20 மிகி காப்ஸ்யூல் (omeprazole capsules 20mg uses tamil)எடுத்துக்கொள்ள கூடாது?

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மதுவருந்துபவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து