உடல் சூட்டை இப்படியெல்லாம் கூட குறைக்கலாமா..! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..!

Advertisement

உடல் சூட்டை குறைக்கும் முத்திரை

சாதாரணமாக சிலருக்கு உடல் கூடு அதிகமாக இருக்கும். அதுவும் இப்போது கோடை காலம் வேறு வந்துவிட்டது. அதனால் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். நாமும் அத்தகைய உடல் சூட்டினை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று மோர், இளநீர் மற்றும் தர்பூசணி போன்றவற்றையினை பருகி இருப்போம். ஆனால் இவற்றை எல்லாம் செய்தால் கூட முழுமையான பலன்கள் நமக்கு கிடைப்பது இல்லை. அதனால் தான் உடல் சூட்டை வேறொரு முறையில் குறைப்பதற்கான வழிகளை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகவே உடல் சூட்டினை குறைக்க கூடிய யோகாசனத்தை பற்றி தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 மூட்டுவலி குணமாக இப்படி கூட செய்யலாமா.. 

Udal Soodu Kuraiya Muthirai:

உடல் சூட்டினை சில பொருட்களை சாப்பிட்டு குறைப்போம். ஆனால் உடல் சூடு குறைய எளிய முறையில் முத்திரையின் மூலம் எப்படி குறைப்பது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லிங்க முத்திரை:

லிங்க முத்திரை

முதலில் ஒரு விரிக்கையினை விரித்து முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு 2 நிமிடம் பொறுமையாக மூச்சியினை உள்ளே இழுத்து வெளியே விட்டு இயல்பு ன் நிலைக்கு வந்து விடுங்கள்.

2 நிமிடம் நிமிடம் கழித்த பிறகு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு  உங்களுடைய இரண்டு கைகளில் உள்ள விரல்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து வைக்குமாறு வைத்து கொண்டு இடது கை பெருவிரலை மட்டும் நேராக வைத்து கொள்ளுங்கள்.

பின்பு  மற்ற விரல்கள் அனைத்தினையும் லேசாக அழுத்தி கொண்டு 2 நிமிடம் மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.

இவ்வாறு செய்து முடித்த பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விடுங்கள். உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இந்த லிங்க முத்திரையை 2 நிமிடம் என 6 முறை செய்ய வேண்டும்.

லிங்க முத்திரை பயன்கள்:

லிங்க முத்திரை செய்வதன் மூலம் உடல் சூடு சமநிலைக்கு வருவதோடு மட்டும் இல்லாமல் ஆஸ்துமா, சைன்ஸ், மன அழுத்தம், தொண்டை வலி மற்றும் தூக்கமின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வினை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ தலைமுடியை இப்படியெல்லாம் கூட வளர வைக்க முடியுமா.. இது தெரியாம போச்சே.. 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement