உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய | High Blood Pressure Control in Tamil
மனிதனுக்கு இருக்கும் பிரச்சனையில் உயர் இரத்த அழுத்தமும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இரத்த அழுத்தம் பிரச்சனையை சந்திக்கின்றனர். முக்கியமாக இரத்த அழுத்தம் வருவதற்கு கவலை, டென்சன் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. நம் உடலில் இருக்கும் பிரச்சனை அனைத்திற்கும் மாத்திரை எடுத்து கொண்டால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு சில யோகா வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
உயர் இரத்த அழுத்தம் குறைய யோகா:
தடாசனம் செய்யும் முறை:
தடாசனம் செய்வதற்கு முதலில் நேராக நின்றபடி இரு கைகளையும் கோர்த்து மேல் நோக்கி உயர்த்த வேண்டும். பிறகு இரண்டு குதிகால்களையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இப்படி நின்றபடியே மூச்சை வெளிவிட்டவாறே நார்மல் நிலைக்கு வர வேண்டும். இப்படி ஒரு 10 தடவை செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ டென்ஷனா இருக்கும் போது இதை பண்ணுங்க ரிலாக்ஸா பீல் பண்ணுவீங்க..!
பச்சிமோத்தாசனம் செய்யும் முறை:
ஒரு விரிப்பில் இரு கால்களையும் நீட்டி உட்கார வேண்டும். தலை முட்டியை தொடுமாறு வைத்து இரு கைகளும் கால்களை பிடித்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தவாறே நார்மல் நிலைக்கு வர வேண்டும்.
கோமுகாசனம் செய்யும் முறை:
உட்கார்ந்த நிலையில் கால்களை நீட்டி கொள்ளவும். வலது காலை இடது காலின் மேலேயும், இடது காலை வலது காலின் கீழேயும் வைக்க வேண்டும். வலது கையை முதுகிற்கு பின்னாடி வைத்து இடது கையால் பிடித்து கொள்ள வேண்டும். மூச்சை வெளிவிட்டவாறே நார்மல் நிலைக்கு வர வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள மூன்று ஆசனங்களையும் செய்து வந்தாலே விரைவிலே உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
இதையும் படியுங்கள் ⇒ உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!
இது போன்ற யோகா தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் | யோகா |