தொப்பையை குறைப்பதற்கு டயட் தேவையில்லை.! இதை மட்டும் செய்தால் போதும்.!

Advertisement

தொப்பை குறைய என்ன செய்ய வேண்டும்

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் இருக்கும் பிரச்சனை என்றால் தொப்பை தான். தொப்பை வந்துவிட்டாலே வயதான தோற்றத்தை கொடுத்துவிடும். இந்த பிரச்சனைக்காக பல மருந்துகள், டயட், உடற்பயிற்சி போன்றவை ட்ரை செய்திருப்பீர்கள். உங்களுக்கு இவற்றில் ஏதும் பலனை கொடுக்கவில்லை என்று கவலை படாதீர்கள். இந்த பதிவில் தொப்பையை குறைப்பதற்கு சில யோகாசனங்களை படித்து தெரிந்து கொள்வதோடு ட்ரை பண்ணி பாருங்க.

Pad Sanchalan Yoga:

Pad Sanchalan Yoga

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் நீங்கள் தரையில் படுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது கைகளை தரையில் படுமாறும், உடலை ஓட்டுமாறும் வைத்து கொள்ள வேண்டும். கால்களை சைக்கிள் ஓட்டும் போது பெடலிங் செய்வோம் அல்லவா அது போல் மெதுவாக செய்து கால்களை கீழே வைக்க வேண்டும். இது போல் 5 முறை முறை செய்யுங்கள்.

உடல் எடை குறையவும், தொப்பையை குறைக்கவும் இந்த ஆசனம் பெரிதும் உதவுகிறது.

குறிப்பு:

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு ஆசனங்களும் சர்க்கரை நோய், இதய பிரச்சனை, முதுகு பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும். 

இதையும் படியுங்கள் ⇒ ஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..!

Pad Chakrasana Yoga in Tamil:

இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். பின் இரு கால்களையும் நேராக நீட்டி கொள்ளுங்கள். பிறகு கைகளை நீட்டியுள்ள கால்களில் தொடுமாறு வைத்து சுழற்றி கொள்ளுங்கள். இது போல் தினமும்செய்யுங்கள்.

ஆசனம் செய்வதினால் உடல் எடை குறையவும், தொப்பையை குறைக்கவும், முதுகெலும்பு பலம் பெறவும் உதவுகிறது. 

சூரிய  நமஸ்காரம் செய்வது எப்படி.?

சூரிய  நமஸ்காரம் செய்வது எப்படி

சூரிய நமஸ்கரத்தில் 12 நிலைகள் உள்ளது. அதில் ஒவ்வொரு நிலையாக பார்ப்போம்.

முதல் நிலை:

முதலில் சூரியனை பார்த்தவாறு இரு பாதங்களையும் ஒன்றாக இணைத்து நேராக நிராக வேண்டும். இரு கைகளையும் ஒன்றாக இணைத்து அதாவது வணக்கம் வைப்பது போல் வைத்து நெஞ்சு பகுதியில் வைத்து மூச்சை விட வேண்டும்.

இரண்டாம் நிலை:

முதல் நிலையில் கூறப்பட்டுள்ளது போல் நின்று கைகளை தலைக்கு மேல் உயர்த்தி உங்களின் முதுகை எவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கு வளைத்து கொள்ள வேண்டும். இந்த முறை செய்யும் போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.

மூன்றாம் நிலை:

அடுத்து உங்களின் முதுகெலும்பை வளைத்து காலின் தொடுமாறு வைத்து கொள்ள வேண்டும். முகம் முட்டியை தொடுமாறு இருக்க வேண்டும். இந்த முறை செய்யும் போது மூச்சை வெளியில் விட வேண்டும்.

நான்காம் நிலை:

இந்த ஆசனத்தை முட்டி போடும் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். வலது காலை மட்டும் பின்னால் முழுவதுமாக நீட்டி கொள்ள வேண்டும். இரு கைகளையும் இடது களின் இரு பக்கங்களிலும் வைத்து கொள்ளுங்கள்.

ஐந்தாம் நிலை:

நான்காவது நிலையில் உள்ளது போல் இரு கால்களையும் பின்னால் நீட்டி கொள்ளுங்கள். கைகளை புண் பக்கம் வைத்து உடலை நிமிர்த்தி மூச்சை வெளியிடுங்கள்.

ஆறாம் நிலை:

இதற்கு முழுவதுமாக படுத்து கொள்ளுங்கள். நெற்றி, மார்பு, முழங்கால் மட்டும் தரையை தொடுமாறு வைத்து கொள்ள வேண்டும். மற்ற உறுப்புகள் தரையை தொட கூடாது.

ஏழாம் நிலை:

கால்களையும், கைகளும் தரையில் ஊன்றி இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். மார்பு பகுதி முன் பகுதியிலும், தலை பின் பகுதியிலும் உடம்பை வளைத்தவாறு இருக்க வேண்டும்.

எட்டாம் நிலை:

சுவாசத்தை வெளிவிட்டவாறு கைகளையும், பாதத்தையும் தரையில் ஊன்றி இருக்க வேண்டும். முதுகெலும்பு வளைந்து தரையை பார்த்து இருக்க வேண்டும்.

ஒன்பதாம் நிலை:

நான்காவது நிலையில் கூறியுள்ளது  போல் மூச்சை உள் இழுத்தவாறு செய்ய வேண்டும்.

பத்தாம் நிலை:

அடுத்து உங்களின் முதுகெலும்பை வளைத்து காலின் தொடுமாறு வைத்து கொள்ள வேண்டும். முகம் முட்டியை தொடுமாறு இருக்க வேண்டும். இந்த முறை செய்யும் போது மூச்சை வெளியில் விட வேண்டும்.

பதினொன்றாம் நிலை:

முதல் நிலையில் கூறப்பட்டுள்ளது போல் நின்று கைகளை தலைக்கு மேல் உயர்த்தி உங்களின் முதுகை எவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கு வளைத்து கொள்ள வேண்டும். இந்த முறை செய்யும் போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.

பன்னிரெண்டாம் நிலை:

சூரியனை பார்த்தவாறு இரு பாதங்களையும் ஒன்றாக இணைத்து நேராக நிராக வேண்டும். இரு கைகளையும் ஒன்றாக இணைத்து அதாவது வணக்கம் வைப்பது போல் வைத்து நெஞ்சு பகுதியில் வைத்து மூச்சை விட வேண்டும்.

 இந்த ஆசனத்தை காலை நேரத்தில் செய்ய வேண்டும். மேலும் இந்த் ஆசனத்தை செய்வதால் உடலை ஆரோக்கியமாகவும், மனதை அமைதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் உடல் எடை குறையவும், தொப்பையை குறைக்கவும், மன அழுத்தம் இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது.  

இதையும் படியுங்கள் ⇒ 7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

இது போன்ற பயனுள்ள யோகா தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்  யோகா 
Advertisement