Yoga Poses for Sinus Problem in Tamil
சைனஸ் பிரச்சனை என்பது இன்றைய கால கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு மிக பெரிய பிரச்சனையாகும். அதனை போக்குவதற்காக நீங்களும் பல வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள் அவையாவும் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் சைனஸ் பிரச்சனையை முழுமையாக குணப்படுத்த உதவும் சில யோகாசனங்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை செய்து உங்களின் சைனஸ் பிரச்சனையை போக்கி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம்
Yoga Poses for Sinus Problem in Tamil:
1. சலம்ப சர்வாங்காசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்து கொள்ளுங்கள். பின்னர் மெதுவாக அடிவயிற்றை உந்தியவாறு கால்களை மேலே தூக்குங்கள். வளைக்காமல் மேலே தூக்க வேண்டும். பின் இடுப்பிற்கு கைகளை முட்டு கொடுத்து இடுப்பு பகுதியையும் மேலே தூக்க வேண்டும். இப்போது கழுத்து மேல் முதுகுப் பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இடுப்பிலிருந்து கால் வரை நேராக செங்குத்தாக நிற்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.
இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் சைனஸ் பிரச்சனை விரைவில் குணமாகுவதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
2. சேது பந்தாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்து கொள்ளுங்கள். பின்னர் கால்களை மடக்கி மூச்சை உள்ளே இழுத்து கொண்டே இடுப்பு மற்றும் முதுகை தரையில் இருந்து மேலே தூக்கவும். பின்னர் உங்களின் கைகளால் கால்களை பிடித்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் சைனஸ் பிரச்சனை விரைவில் குணமாகுவதை நீங்களே காணலாம்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |