சீட்டு பணம் கட்டுதல் | Ace is Used to Conduct in Tamil Meaning
வணக்கம் நண்பர்களே இன்று வியாபாரம் பதிவில் சீட்டு கட்டுதல் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். என்ன தான் வங்கி இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஏலச்சீட்டு என நிறைய சிறு சேமிப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் சீட்டு கட்டுதல் என்றால் என்ன?, அதன் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.
வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க |
சீட்டு கட்டுதல் என்றால் என்ன?
சீட்டு கட்டுதல் என்றால் சிறுசேமிப்பு என்று சொல்வார்கள், ஏலச்சீட்டு மற்றும் தட்டு சீட்டு என்றும் சொல்வார்கள். பொதுவாக இந்த சீட்டை நம்பிக்கையின் பெயரில் 10 நபர்கள் அல்லது 20 சேர்ந்து சீட்டு பணம் கட்டுவார்கள். இதனை சீட்டு கட்டுதல் என்று பெயர்.
சீட்டு கட்டுதல் வகை:
- 10 நபர்கள் சீட்டு
- ஏஜென்ட் சீட்டு இரண்டு வகைப்படும்.
10 நபர்கள் சீட்டு என்றால் என்ன?
10 நபர்கள் சீட்டு கட்டுதல் என்றால் ஒரு குழுவில் பத்து நபர்களில் ஒருவர் ஒரு மாதம் பணம் செலுத்தவில்லை என்றால் குழுவில் உள்ள மொத்த நபர்களும் சேர்ந்து அவர்களிடம் சேர்ந்து வசூல் செய்து கட்டுவது நபர்கள் சீட்டு எனப்படும்.
ஏஜென்ட் சீட்டு என்றால் என்ன?
ஏஜென்ட் சீட்டு என்றால் ஒரு குழுவில் உள்ள பத்து நபர்களில் ஒருவர் பணம் கட்டவில்லை அல்லது 3 நபர்கள் காட்டவில்லை என்றால் அந்த பணத்தை அந்த ஏஜென்ட் மொத்தமாக சேர்த்து கட்டவேண்டும். இதுவே ஏஜென்ட் சீட்டு எனப்படும்.
சீட்டு விதிமுறைகள்:
- 10 நபர்கள் சீட்டில் நம்பிக்கை முறையில் சீட்டு கட்டுவார்கள். அதாவது ஒரு மாதத்தில் 10 நபர்கள் சேர்ந்து 1000 விதம் பத்து நபர்கள் பணம் செலுத்தினார்கள் என்றால். அவர்களிடம் மொத்தமாக வசூல் செய்து குழு தலைவர் அனைவரையும் அழைத்து முதல் மாத கடைசியிலோ அல்லது மாத தொடக்கத்திலோ குழுக்கள் முறையில் 10 நபர்களின் பெயர்களை சீட்டில் எழுதி குலுக்க செய்வார்கள். அதில் இந்த சீட்டு கட்டுதல் குழுவை நடத்தும் நபருக்கு 300 அல்லது 500 ரூபாய் என்று பணத்தை எடுத்துகொண்டு மீதி பணத்தை அந்த நபருக்கு கொடுப்பார்கள். இது சீட்டு கட்டுதல் விதி முறை ஆகும்.
- இரண்டாம் மாதம் முதல் மாதம் பணம் பெற்ற நபர் பெயரை குழுக்கள் சீட்டில் எழுத மாட்டார்கள். இது போல் தொடர்ந்து 10 மாதம் கட்டுவார்கள்.
- இந்த சிறு சேமிப்பில் உங்களுக்கு லாபம் என்றால் உங்கள் தெருவில் அல்லது பக்கத்தில் உள்ளவர்களிடம் நம்பிக்கையின் பெயரில் பணம் செலுத்தினால் அது உங்களுக்கு லாபம் தான். ஏனென்றால் சீட்டு கம்பெனியில் பணம் செலுத்தியர்கள் பெரும் நஷ்டத்தை அடைகிறார்கள். மொத்த பணத்தையும் பெற்றுக்கொண்டு கம்பெனியை மூடி விட்டு செல்கிறர்கள். பணம் கட்டியவர்கள் நஷ்டம் அடைகிறார்கள். அதனால் இந்த சீட்டு கட்டுதல் முறை உங்களுக்கு லாபம் தரும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |