சிறந்த தொழில் எது.?
இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது. தொழில் செய்வதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா.! தொழில் செய்வதற்கான முதலீடு மற்றும் யோசனைகளும் வேண்டுமல்லவா.! முக்கியமாக பெண்கள் செய்ய கூடிய அளவிற்கு ஒரு தொழில் யோசனையை பற்றி இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Beauty Parlour Business Ideas in Tamil:
அலங்காரத்தின் தேவை எப்பொழுதுமே இருக்கும். முந்தைய காலத்தில் பெண்கள் பண்டிகை நாட்களில் மட்டும் தான் தன்னை அழகுபடுத்துவார்கள். இப்பொழுது அப்படியில்லை சாதாரண நாட்களில் கூட தன்னை அழகுபடுத்தி கொள்கிறார்கள்.
பெண்கள் முதல் ஆண்கள் வரை தலை முடியையும், சருமத்தையும் பராமரிக்க அடிக்கடி Parlour செல்கிறார்கள். அதனால் Beauty Parlour தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக பார்த்து கடையை வைக்க வேண்டும். இந்த தொழிலிற்கு மூலப்பொருட்கள் வாங்குவதற்கு 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். மொத்தமாக முதலீடு என்று பார்த்தால் 2 லட்சம் வரை தேவைப்படும்.
இதையும் படியுங்கள் ⇒ எதிர்காலத்தில் லாபத்தை அள்ளி கொடுக்கும் சிறந்த தொழில்..!
உங்களுக்கு Hair Cutting, Pedicure, Manicure போன்றவை தெரிந்தாலே இந்த தொழில் தொடங்கி நல்ல லாபத்தை பெறலாம்.
என்னிடம் முதலீடு 2 லட்சம் போட முடியாது என்றால் நீங்கள் வீட்டிலிருந்தே இந்த தொழிலை செய்யலாம். அதற்கு Beautician Course படித்திருக்க வேண்டும். மணப்பெண் அலங்காரம் செய்யலாம், கையில் மெஹந்தி போடலாம். மணப்பெண் அலங்காரம் செய்தால் 5,000 முதல் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம். மெஹந்தி போடுவதற்கு 1,500 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்.
Beauty Products Business Ideas in Tamil:
அழகு சாதன பொருட்கள், முடி பராமரிப்பு பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றை மொத்தமாக கிடைக்க கூடிய இடத்திலிருந்து வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் இந்த கடை போடுவதற்கு Main Area -வாக பார்த்து போட வேண்டும். அப்பொழுதான் வியாபாரம் நன்றாக இருக்கும்.
அழகு சம்மந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தாலும் சரி, அழகு நிலையம் வைத்தாலும் சரி எக்காலத்திலும் தோல்வி அடையாது. நீங்கள் யோசிக்காமல் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.
இதையும் படியுங்கள் ⇒ எதிர்காலத்தில் பணக்காரராக மாற்றக்கூடிய 3 தொழில்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |