வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் கையில் 250 ரூபாய் இருக்கா..? அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்..!

Updated On: August 16, 2023 1:17 PM
Follow Us:
Beetroot Malt Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Beetroot Malt Making Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாகிவிட்டது. அதனால் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பல இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Beetroot Malt தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Beetroot Malt Making Business Plan in Tamil:

Beetroot Malt Making Business Plan in Tamil

இந்த Beetroot Malt-ல் பல சத்துக்கள் உள்ளதால் பலரும் இதனை தங்களின் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். அதனால் நீங்கள் Beetroot Malt தயாரிக்கும் தொழிலை தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் எந்த வித தயக்கமும் இன்றி இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Beetroot Malt தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பீட்ரூட், நாட்டு சர்க்கரை, பாதாம், முந்திரி, ஏலக்காய் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> அரைத்து வைத்தால் மட்டும் போதும் மாதம் லட்ச கணக்கில் லாபம் தரும் தொழிலை தொடங்குங்கள்

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Beetroot Malt-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் போதும்.

தயாரிக்கும் முறை:

Beetroot Malt Making Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பாதாமை 1 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து அதனுடைய தோலை நீக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் தோல் நீக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். அடுத்து நாம் வாங்கி வைத்துள்ள பீட்ரூட்களின் தோலினை நீக்கி கொள்ளவும். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள பீட்ரூட்டினை சேர்த்து அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

எந்த அளவுக்கு என்றால் அதில் உள்ள தண்ணீரெல்லாம் நீங்கி அது சிறிய துண்டுகளாக  மாறும் அளவிற்கு வந்ததும் அதனை அடுப்பிலிருந்து இறக்கி நன்கு குளிர விடுங்கள்.

பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் இந்த பொடியை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

பேக்கிங் செய்து வைத்துள்ள Beetroot Malt-னை நீங்கள் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வருடத்தில் 365 நாட்களும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் இதனை உடனடியாக தொடங்குங்கள்

அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Beetroot Malt-ன் விலை 600 – 650 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Beetroot Malt-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 6,000 – 6,500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

அதனால் இந்த Beetroot Malt தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!