Beetroot Powder Business
அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தொழிலை செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த பதிவில் தினமும் தொழில் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய பதிவில் ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழில் செய்வதற்கு முதலீடு எவ்வளவு, மூலப்பொருட்கள் மற்றும் இந்த தொழில் தொடங்குவது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Beetroot Powder Business in Tamil:
சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழிலை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே தொடங்கலாம். இன்றைய காலத்தில் இருக்கும் மக்கள் அனைவருமே ஆர்கானிக் பொருட்களை தான் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால் நீங்கள் பீட்ரூட் பவுடர் தயார் செய்து விற்பனை செய்யலாம். பீட்ரூட் பல வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் இந்த பவுடரை மக்கள் கட்டாயம் வாங்குவார்கள். எனவே இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் ஒரு நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..! |
முதலீடு:
பீட்ரூட் விலை, பேக்கிங் கவரின் விலை மற்றும் Sealing Machine விலை என்று இந்த தொழிலுக்கு முதலீடு செய்ய வேண்டும். Sealing Machine விலை ஆன்லைனில் 200 லிருந்தே தொடங்குகிறது. அதனால் இந்த தொழில் செய்வதற்கு 2000 ரூபாய் முதலீடு இருந்தால் மட்டும் போதும்.
இடம்:
இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடமெல்லாம் தேவையில்லை. இந்த தொழிலை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்து தினமும் நல்ல வருமானத்தை சம்பாதிக்கலாம்.
மூலப்பொருட்கள்:
- பீட்ரூட் – 1 கிலோ
- பேக்கிங் கவர்
- சீல் இயந்திரம்
வீட்டில் இருந்தபடியே தினமும் 3,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சிறந்த தொழில்..! |
பவுடர் தயாரிக்கும் முறை:
1 கிலோ அல்லது உங்களுக்கு தேவையான அளவு பீட்ரூட் வாங்கி அதன் தோல்களை சீவி கொள்ள வேண்டும். பின் அதை காய் சீவும் கட்டையில் வைத்து சிறிய சிறிய துண்டுகளாக சீவி கொள்ள வேண்டும்.
பின் இதை 4 லிருந்து 5 நாட்கள் வரை வெயிலில் காயவைக்க வேண்டும். பீட்ரூட் வத்தல் போல் காய்ந்தவுடன் அதை மிக்சி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அந்த பவுடரை சலித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து நல்ல பிரண்டான பாலிதீன் கவரில் வைத்து பேக் செய்ய வேண்டும். பின் அந்த பேக்கில் உங்கள் முகவரிகளை கொடுத்து விற்பனை செய்ய வேண்டும்.
விற்பனை செய்யும் முறை:
இந்த பவுடரை நீங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் பெரிய மால், Beauty பார்லர், ஆர்கானிக் ஸ்டோர் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
ஆன்லைனில் இந்த பீட்ரூட் பவுடர் 100 கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாம் 5 கிலோ பீட்ரூட் வாங்கி பவுடர் செய்தால் நமக்கு 1 கிலோ பீட்ரூட் பவுடர் கிடைக்கிறது. அந்த ஒரு கிலோ பவுடரை நாம் விற்பனை செய்தால் நமக்கு ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வரை கிடைக்கும்.இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |