பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க சிறந்த தொழில்கள் | Business Ideas For Women in Tamil

Business Ideas For Women in Tamil

பணம் சம்பாதிக்க எளிய தொழில்கள் | Home Small Business Ideas in Tamil

வணக்கம் நண்பர்களே.! உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் தொழில்களை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்து செய்ய கூடிய சிறந்த தொழில்களை பற்றி காண்போம். பெண்களுக்கு இருக்க கூடிய ஆசை ஒன்று தான் சுய தொழில். நாம் இன்னொருவரிடம் வேலை செய்யும் போது அங்குள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் ஓய்வு எடுக்கவே நேரம் இருக்காது. ஆனால் சுயதொழில் செய்தால் நாமே முதலாளி. அதிலும் வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்தால் ஏற்றதாக இருக்கும். பெண்கள் வீட்டில் இருக்கும் வேலையும் செய்து கொண்டு பணம் சம்பாதிப்பிற்கான தொழில்களையும் செய்யலாம். வாங்க அது என்னென்ன தொழில் என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்  ரூ.25,000/- முதலீடு ரூ.75,000/- வருமானம் தரும் சிறந்த ஐந்து தொழில்கள்..!

Oorugai Business Ideas in Tamil:

Oorugai Business Ideas in Tamil

இன்று இல்லை நாளை இல்லை எந்நாளிலுமே அனைவருக்கும் பிடித்த ஒன்று ஊறுகாய். வேலைக்கு செல்பவர்கள் சைடிஷ் செய்யமுடியவில்லை என்றால் உடனே வாங்குவது ஊறுகாய் தாங்க. நம்மாலே அம்மா செய்த சைடிஷ் நல்லா இல்லை என்றால் உடனே கேட்பது ஊறுகாய் இருந்தா வை அம்மா என்று தான் சொல்லுவோம் அல்லவா. அதனால் நீங்கள் நல்லா ஊறுகாய் செய்வேன் என்றால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். எப்படி.? என்று கேட்கிறீர்களா. ஊறுகாய் செய்து அதனை டப்பாவில் பேக் செய்து பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் கொடுத்து விற்க சொல்லலாம். அதில் அவர்களுக்கு ஒரு கமிஷன் எடுத்துப்பார்கள். இந்த தொழிலை செய்தால் நஷ்டமே ஆகாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தமிழ்நாட்டில் யாரும் செய்யாத! பத்தே நாளில் லட்சக்கணக்கில் வருமானம் தரும் அருமையான தொழில்..!

Masala Business Ideas in Tamil:

Masala Business Ideas in Tamil

வீட்டில் நாம் செய்யும் குழம்புகளில் மசாலா சேர்த்து தான் குழம்பு வைப்போம் அல்லவா. அந்த மசாலாவை நீங்கள் வீட்டில் குழம்பு வைக்கும் போது அரைத்து போடுவீர்கள். அந்த மசாலாவை நீங்கள் கொஞ்சம் அதிகமாக செய்து பாக்கெட் போட்டு  மளிகை கடையில் கொடுத்து விற்பனை செய்யலாம். சாம்பார் மசாலா, மீன் மசாலா, பிரியாணி மசாலா, சிக்கன் மசாலா என பல மசாலாக்களை செய்யலாம். அதுமட்டுமில்லாமல் தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம் போன்றவற்றிற்கு  போடும் மசாலாக்களையும் செய்து மளிகை கடை மற்றும் உறவினர்களிடம் கொடுத்தாலே போதும் நல்லா விற்பனை ஆகும்.

Tuition Business Ideas in Tamil:

Tuition Business Ideas in TamilTuition Business Ideas in TamilTuition Business Ideas in TamilTuition Business Ideas in Tamil

நீங்கள் இந்த தொழிலை செய்தால் நஷ்டமே ஆகாது. எல்லாரும் வீட்டில் பெற்றோர்களே  குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க மாட்டர்கள். கட்டாயமாக Tuition -க்கு தான் அனுப்புவார்கள். அதனால் நீங்கள் இந்த பாடத்தில் சிறந்து விளங்குவேன் என்றால்  இந்த தொழிலை தாராளமாக செய்யலாம். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு தொகையாக பெற்றுக்கொள்ளலாம்.

மேல் கூறியுள்ள எந்த தொழிலை செய்தாலும் நஷ்டமே ஆகாது. அதனால் இந்த தொழில்களை செய்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறோம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022