தமிழ்நாட்டில் செய்யக்கூடிய சிறந்த மற்றும் லாபகரமான தொழில் இது தான்!

Advertisement

தமிழ்நாட்டில் செய்யக்கூடிய தொழில்கள் | Business Ideas in Tamil Nadu

அனைவருக்குமே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏன் அப்படினா நாம தான் அந்த தொழிலுக்கு பாஸ். யாரை நம்பியும் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது. இருந்தாலும் உங்களிடம் புதிதாக தொழில் செய்ய பணம் இருக்கு, இடம் இருக்கிறது என்று ஏதாவது ஒரு தொழிலை போய் செய்யக்கூடாது. நீங்கள் செய்ய நினைக்கும் தொழிலை பற்றி நீங்கள் தெளிவாக முதலில் ரிசர்ச் (Research) செய்ய வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தில் என்ன தொழில் செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். போன்று பல விஷயங்களை நாம் ரிசெர்ச் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் அந்த தொழிலை ஆரம்பிக்கவே வேண்டும். சரி இந்த பதிவில் தமிழ் நாட்டில் செய்யக்கூடிய சிறந்த மற்றும் லாபகரமான தொழில் வாய்ப்புகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Freelance Copywriter or Content Writer:

Freelance Copywriter

Business Ideas in Tamil Nadu – உங்களிடம் ஒரு topic கொடுத்து எழுத சொன்னால் உங்களுக்கு நன்கு எழுத தெரியும் அப்படி என்றால் உங்களுக்கு இந்த Freelance Copywriter or Content Writer தொழில் வாய்ப்பு சிறந்த ஒன்றாக இருக்கும். நீங்கள் இரு நல்ல எழுத்தாளராக இருந்தால் வலைப்பதிவு இடுகைகள், விளம்பரங்கள் மற்றும் டேக்லைன்களை எழுதுவதற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கலாம் இதன் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும். உதாரணத்திற்கு ஒருவர் அவர்களது கடையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த அவர்களது கடையை விளம்பரப்படுத்த அதற்கு நீங்க content எழுத்து தருவதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். தமிழ்நாட்டில், ஃப்ரீலான்ஸ் காப்பி ரைட்டிங் தொழிலை நடத்துவதற்கு காப்பிரைட்டர்களுக்கு அதிக தேவை உள்ளது. இதற்கு உங்களுக்கு தேவையானது நல்ல இணைய இணைப்பு மற்றும் பொருத்தமான எழுதும் சாதனம்.

100% Village Business கொஞ்சம் இடம் இருந்தால் போதும் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

Poultry Farming Enterprise – கோழி வளர்ப்பு:

 Poultry Farming Enterprise

தமிழ் நாட்டில் அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று தான் கோழி வளர்ப்பு. அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் மிகவும் பிடித்த இறைச்சி அப்படினா அது சிக்கன் தான். ஆகவே நீங்கள் கோழி வளர்த்து அதனை விற்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். இதற்கு பெரிய அளவில் இடவசதி தேவைப்படாது உங்கள் வீட்டில் மொட்டை மாடி அல்லது உங்கள் வீட்டின் பின் புறத்தில் கோழிகளை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம்.

Event management:

Event management

Business Ideas in Tamil Nadu – அடுத்ததாக பார்க்க போகும் தொழில் Event management. இந்த Event management பொறுத்தவரை தமிழ்நாட்டின் தலைசிறந்த தொழிலாக பார்க்க படுகிறது. ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்பது ஒரு நிகழ்ச்சியை அழகாக வடிவமைத்து அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து கொடுப்பதே ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் என்பதாகும். பிறந்தநாள் விழாக்கள், திருமணங்கள் மற்றும் கார்ப்பரேட் பார்ட்டிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறுவதால், ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்பது வெகுமதியளிக்கும் தொழிலாக கரு தப்படுகிறது.

Work From Home – சூப்பரான பிசினஸ் ஐடியா..!

Food Truck Business:

 

Business Ideas in Tamil Nadu – பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சைவ உணவு உண்பவர்கள், அசைவ உணவு உண்பவர்கள் என அனைவரும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுகிறார்கள். நீங்கள் தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க விரும்புகிறீர்கள் என்றால், Food Truck or Fast Food Center  தொடங்குவது சிறந்த முடிவாகும். வாடிக்கையாளர்களை கவருவதற்கு ஆரம்பத்தில் உங்கள் உணவகத்தில் வித விதமான உணவுகளை செய்து விற்பனை செய்யுங்கள். அதேபோல் கம்மியான விலையில் விற்பனை செய்யுங்கள் இதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

மேலும் நீங்கள் Food Truck Business-ஐ ஆரம்பிப்பது மிகவும் சிறந்த முடிவாகும். அதாவது உங்கள் கடையை நீங்கள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று அங்கு விற்பனை செய்யலாம். இதற்காக நீங்கள் தனியாக இடம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது.

தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் மாதம் ₹50,000 சம்பாதிக்கலாம்

Home Bakery Business:

Home Bakery Business

Business Ideas in Tamil Nadu – சமீப காலமாக, பேக்கரி தயாரிப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேக்கரி தொடங்குவது தமிழ்நாட்டின் சிறந்த தொழில்களில் ஒன்றாகும். இந்த தொழில் செய்வதில் நீங்கள் ஒரு திறமையானவராக இருந்தால், சிறிய பட்ஜெட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கி, காலப்போக்கில் அதை மேம்படுத்தி, பொருத்தமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும். அதேபோல் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பேக்கரியைத் தொடங்குவது என்பது இப்பொழுது மிகவும் பிரபலமாகி வருகிறது, குறிப்பாக இதற்கு அதிக ஆரம்ப முதலீடு அல்லது சமையல் அறிவு தேவையில்லை.

இந்த தொழில் பொறுத்தவரை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தயாரிப்புகளின் சமநிலையை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பேக்கரி பொருட்கள் திருப்திகரமாக இருந்தால் இதன் மூலம் நீங்கள் நிறைய வருமானம் பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement