Scrubber Making Business in Tamil | Buyback Business in Tamilnadu
Buyback Business in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் புதிதாக வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெண்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிக்க உங்களிடம் 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பணம் இருந்தால் நீங்களும் ஒரு சிறு தொழிலதிபர் ஆகலாம். இந்த தொழில் செய்வதற்கு நீங்கள் என்ன இயந்திரம் வாங்க வேண்டும், என்ன மூலப்பொருட்கள் வாங்க வேண்டும், நாம் தயார் செய்த பொருட்களை எப்படி சாந்தப்படுத்த வேண்டும் மற்றும் இந்த தொழில் செய்வதன் மூலம் நமக்கு தினசரி எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியாம் வாங்க.
வீட்டில் இருந்து என்ன தொழில் செய்யலாம்? – Buyback Business in Tamil
பொதுவாக நமது வீட்டில் பாத்திரம் கழுவ பெருபாலும் பாத்திரம் விளக்கும் கம்பியை நமது வீட்டில் உள்ள பெண்கள் பயன்படுத்துவார்கள். இதனை ஆங்கிலத்தில் Scrubber என்று சொல்வார்கள். இந்த Scrubber-ஐ வீட்டில் இருந்தபடியே தயார் செய்து எப்படி விற்பனை செய்யலாம் என்பதை பற்றி தான் நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.
இது ஒரு Buyback Business என்பதால் நீங்கள் Scrubber-ஐ தயார் செய்ய இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறைய நிறுவங்கள் அவர்கள் தயார் செய்த பொருட்களை பேக்கிங் செய்வதற்கென்று நிறைய தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன ஆகவே அந்த நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று நீங்கள் Scrubber-ஐ பேக்கிங் செய்து தருவதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே வருமானம் பெற முடியும்.
இந்த Scrubber-ஐ பேக்கிங் செய்வதற்கென்று இயந்திரங்கள் இருக்கின்றன அதன் மூலம் நீங்கள் எளிதாக பேகிங்க் செய்யலாம். இந்த இயந்திரங்களில் இரண்டு வகையான இயந்திரங்கள் உள்ளன அவற்றில் ஒன்று Manual Scrubber Packing Machine மற்றொன்று automatic Scrubber Packing Machine.
இவற்றில் Manual Scrubber Packing Machine விலை குறைந்தபட்சம் 17,000 முதல் அதிகபட்சம் 80000 ரூபாய் வரை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது.
பேக்கிங்கி செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் என்றால் Branding Sheet, பிளாஸ்ட்டிக் கப் இவை இரண்டும் தேய்வைப்படும். இதனை நாம் மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.
நாம் பேக்கிங் செய்ய எவ்வளவு முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்?
ஒரு Branding Sheet-யின் விலை ரூபாய் 7.
Scrubber – 12X2.36=28.32.
12 Plastic Cup Price – 12 X 0.60=07.20.
ஒரு Sheet-யில் 12 Scrubber இருக்கிறது, இந்த 12 scrubber-ஐ உற்பத்தி செய்ய ஆகும் செலவு என்று பார்த்தால் 45 ரூபாய். ஆகவே நாம் உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனம் இவகற்றை 52 ரூபாய்க்கு எடுத்து கொள்வார்கள். ஆகவே நாம் தயார் செய்த ஒரு Sheet-க்கு கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் 7 ரூபாய் கிடைக்கும். இதுவே நாம் சந்தையில் விற்பனை செய்யும்பொழுது 8 அல்லது 9 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் நீங்கள் எவ்வளவு sheet பேக்கிங் செய்கின்றிகளோ அந்த அளவுக்கு நீங்கள் வருமானம் பார்க்க முடியும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாளைக்கு 500 sheet பேக்கிங் செய்து கொடுக்கும் போது உங்களுக்கு 3500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |