Fruits Packaging Business in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தரக்கூடிய ஒரு சூப்பரான பிசினஸ் ஐடியாவத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அப்படியென்ன உத்தரவாதம் தரக்கூடிய பிசினஸ்னு கேக்குறீங்களா? இன்றைய காலத்தில் பாரம்பரிய சத்துமிக்க உணவு முறைகள் முற்றிலும் மறைந்து ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ், வெஸ்டன் புட்ஸ் என்று ஸ்டைலுக்காக உணவு முறைகளையே நாம் மாற்றிவிட்டோம். இதனால் யாருக்கு நன்மை என்று நாம் ஒருநாளும் நினைத்து பார்த்திருப்போமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் கூறவேண்டும். ரோட்டு கடைகளில் விற்கக்கூடிய பல தரப்பட்ட உணவுகளை வாங்கி நாம் உட்கொள்வதால் நம் உடலில் நமக்கே தெரியாத பல வித்தியாசமான நோய்கள் நம்மை தாக்கி பேரழிவில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாங்க இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு குட்டி பிசினஸ் ஐடியா என்னானு தெரிஞ்சிப்போமா..!
Fruit Business Ideas in Tamil:
இன்றைய சூழலில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் காலமாக உலகம் மாறிவிட்டது. இதனால் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி சத்தான உணவு முறைகள் கிடைப்பது என்பது மிகவும் அரிதாகிவிட்டது.
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை விட்டுவிட்டு ஆங்காங்கே கடைகளில் விற்கக்கூடிய எண்ணெய் பதார்த்த உணவுகளை வாங்கி சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக்கொள்கிறோம்.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஒரு சிறந்த பிசினஸ் தான் பழங்களை மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி விற்பனை செய்யும் பிசினஸ்.
லாபகரமான பிசினஸ்:
கடையில் விற்கும் வடை, சமோசா போண்டா போன்ற உடலுக்கு தீங்கு தரக்கூடிய பொருளை காசு கொடுத்து நோயினை நாமே விலைக்கு வாங்குகிறோம்.
பழங்களில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. நமது ஊரிலே மொத்த பழ வியாபாரிகள் பல பேர் இருப்பார்கள். இந்த தொழிலை நீங்கள் இப்போதே செய்ய விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் ஊரிலே இருக்கக்கூடிய மொத்த பழ வியாபாரியிடமோ அல்லது மொத்தமாக பழங்கள் ஏற்றுமதி செய்யும் இடத்திற்கு சென்று குறைந்து விலையில் பழங்களை வாங்கிக்கொள்ளலாம்.
தினசரி லாபம் தரும் தொழில்களின் பட்டியல் |
லாபம்:
இந்த பிசினஸில் மொத்தமாக பழங்களை வாங்கி ஆப்பிளோ, அன்னாசியோ, மாதுளையோ இது போன்ற பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சிறிய பேக்கேஜில் போட்டு விற்பனை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்யலாம்?
மேல் கூறியது போன்று பழங்களை பேக்கிங் டைப்பில் விற்பனை செய்தால் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக விருப்பப்பட்டு வீட்டிற்கு வாங்கி செல்வார்கள். வாடிக்கையாளர்களுக்கு வேலையும் மிகவும் சுலபமாக முடிந்துவிடும்.
வாடிக்கையாளர்களுக்கே இந்த பழ பேக்கிங்கை பார்த்தால் வாங்குவதற்கு ஆர்வம் அதிகரிக்கும். இந்த தொழில் செய்வதற்கு கால நேரம் என்று எதுவும் இல்லை. எல்லா நேரங்களிலும் லாபம் தரக்கூடிய அருமையான தொழில்.
இந்த தொழில் செஞ்சா வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் |
மக்கள் கூடும் பேருந்து நிலையங்களில், பேருந்தில் பயணிப்பவர்களுக்கு, தெருக்களில், பள்ளி, கல்லூரிகளில், பெட்டி கடை இது போன்று தேர்வு செய்து விற்பனை செய்தால் இந்த தொழிலில் நீங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ஒரு நாளைக்கான லாபத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |