முதலீடு 5000 வருமானம் 30000 பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறுதொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்து வருமானம் பெரும் சிறுதொழில்..!

Gum Making Business in Tamil – வணக்கம் நண்பர்களே இன்று நாம் வீட்டில் இருந்து செய்யக்கூடிய ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த தொழிலை பெண்கள் கூட எடுத்து செய்யலாம்.. பெண்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் வீட்டில் இருந்தே தொடங்கலாம். அது என்ன தொழில் என்று யோசிரிங்களா? அது வேறு ஒன்றும் இல்லை ஸ்டேஷனரி பொருட்களில் அதிகளவு விற்பனை செய்யப்படும் கம் தயரிப்பு தொழிலை பற்றி தான். சரி வாங்க இந்த தொழில் துவங்க நமக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும் மற்றும் தினமும் இதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

கம் தயாரிப்பு தொழில்:

இந்த கம் தயாரிப்பு தொழில் இரண்டு வகை உள்ளது அவை.. லிக்விட் கம் மற்றொன்று பசை போன்று இருக்கும் கம். இவற்றில்  நாள் லிக்விட் கம் தயரிப்பு தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். கம் பொதுவாக அனைத்து இடங்களிலும் பய்னபடுத்தப்படும் ஒரு முக்கிய ஸ்டேஷனரி பொருள் ஆகும். பள்ளிக்கி செல்லும் பணிவார்கள், ஆசியர்களுக்கு, அலுவலகங்களுக்கு என்று அனைத்து இடங்களுக்கும் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும். ஆக இதனை தயாரி செய்து விற்பனை செய்வதன் மூலன் நல்ல வருமானம் பெற முடியும்.

இடம்:

இந்த தொழிலுக்கு என்று தனியாக இடங்களை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை தொடங்கலாம்.

தேவைப்படும் முழ பொருட்கள்:

  1. Gum Powder
  2. De Ionized Water
  3. Fragrance
  4. Color Powder
  5. பேக்கிங் கவர் மற்றும் பாட்டில்

தேவைப்படும் இயந்திரம்:

கம் மிக்ஸ் செய்வதற்கு Gum Mixing Machine தேவைப்படும். இந்த மிசின் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 25,000/- ருப்பை தான் இருக்கும்.

லிக்விட் கம் தயாரிக்கும் முறை:

  • Gum Powder – 100 கிராம்
  • De Ionized Water – 1.5 லிட்டர்
  • Fragrance – 15 மில்லி
  • Color Powder – 10 கிராம்

1 1/2 லிட்டர் கம் தயாரிப்பதற்க்கான Formula ஆகும். உங்களுக்கு எவ்வளவு லிட்டர் கம் தேவைப்படும்மோ அந்த அளவுக்கு ஏற்றவாறு மல்டிபிள் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இயந்திரத்தில் De Ionized Water, Fragrance, Color Powder ஆகியவற்றை சேர்க்கவும் பின் இயந்திரத்தை இயக்கவும் பிறகு Gum Powder-ஐ கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலவையில் சேர்க்க வேண்டும். பிறகு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு தயார் செய்த கம்மை சிறு சிறு பாட்டிலிகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 கொஞ்சம் உழைத்தால் போதும் 10 நாளில் 1 லட்சம் வரை சம்பாரித்துவிடலாம் .. அருமையான சுயதொழில்..!

செலவு:

1 1/2 லிட்டர் கம் தயார் செய்வதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்றால், முலை பொருட்கள், தயாரிப்பு செலவு மற்றும் இதர செலவுகள் அனைத்தையும் சேர்த்தே நமக்கு 30 ரூபாய் தான் செலவு ஆகும்.

சந்தையில் 20 மில்லி லிக்விட் கம் 5 ரூபாய்க்கும், 50 மில்லி லிக்விட் கம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்ய செய்யப்படுகிறது.

ஆக நாம் தயார் செய்த 1 1/2 காமிற்கு 500 ரூபாய் வரை நமக்கு லாபம் கிடைக்கும்.

ஒரு நாளுக்கு 3 லிட்டர் கம் தயாரித்து விற்பனை செய்தாலே போதும் உங்களுக்கு 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

ஒரு மாதத்திற்கு 30,000 வரை வருமானம் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் அனைத்து கடைகளிலும் இந்த கம்மை விற்பனை செய்யலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022