Herbal Hair Oil Business in Tamil
தொழில் தொடங்க வேண்டுமென்றால் நிறைய பணம் வேண்டும். மேலும் தொழிலை செய்ய நிறைய ஆட்கள் தேவை தனியாக இடம் தேவை என்னதான் செய்ய முடியும்..! என்று நிறைய நபர்கள் மனதில் நினைத்துக்கொண்டு தொழிலை தொடங்கமால் இருப்பார்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் லாபத்தை முதலில் பார்க்க கூடாது. நாம் செய்யும் தொழில் மற்றவர்களுக்கு உதவியாக உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். சரி இன்றைய பதிவில் நாம் என்ன தொழிலை பற்றி சொல்ல போகிறோம் என்று தெரிந்துகொள்வோம்..!
Herbal Hair Oil Business in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
முதலில் தொழிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் அதனுடைய தேவையை பற்றி தெரிந்துகொள்வோம்..! மக்கள் அனைவருமே எந்த பொருளை அதிகமாக வாங்கி வருகிறார்கள் என்று தெரியுமா?
மனிதர்கள் அனைவருக்குமே இருக்கும் பிரச்சனை என்னவென்றால் தலை முடி தான். யாரை பார்த்தாலும் அவர்கள் வீட்டில் நிறைய விதமான ஷாம்பு, எண்ணெய்கள் இருக்கும். அதேபோல் நாம் டிவி பார்க்கிறோம் என்றால் அதில் அதிகளவு வருவது தலைமுடி சம்பந்தமான வீடியோக்கள் மட்டுமே அந்த எண்ணெய்களை வாங்கி தடவியும் சிலருக்கு தலை முடி கொட்டிக்கொண்டு தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அதனாலேயே தலை முடி கொட்டுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆக மக்கள் அனைவருமே இப்போது இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே எண்ணெய்களை தயாரித்து அதனை தலையில் தடவி வருகிறார்கள். இந்த எண்ணெய் தயாரிக்க கிராமத்தில் உள்ளவர்களுக்கு சரியாக இருக்கும் ஆனால் நகரத்தில் உள்ளவர்கள் அந்த பொருட்கள் கிடைப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். சிலர் இதற்காக தேடி தேடி பொருட்கள் வாங்குவார்கள். அவர்களின் வேலைகளை சுலபமாக மாற்றுவதற்கு நீங்கள் அந்த எண்ணெய்களை தயாரித்து விற்கலாம். வாங்க முதலீடு பற்றி தெளிவாக பார்க்கலாம்..!
60 நாட்களில் 4,00,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்..!
முதலீடு:
மொத்தம் இயறக்கை எண்ணெய் தயாரிக்க அந்த பொருட்களுக்கான முதலீடு 10,000 ஆகும்.
- செம்பருத்தி பூ
- கரிசலாங்கன்னி இலை
- கருவேப்பிலை
- கற்றாழை
- மருதாணி
- செம்பருத்தி இலை
- வேம்பாளம் பட்டை
- கிராம்பு
- வெந்தயம்
- விளக்கெண்ணெய்
- கீழாநெல்லி
- தேங்காய் எண்ணெய்
- பெரிய நெல்லிக்காய்
- துளசி இலை
- கருஞ்சீரகம்
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒரே எண்ணெய்யாக தயாரிக்க கூடாது. ஒரு எண்ணெய் தயாரித்தால் அதில் 5 பொருட்களை மட்டும் சேர்த்து அந்த எண்ணெயில் ஒரு பொருளை மட்டும் அதிகமாக சேர்த்து அதனை ஒரு வகை எண்ணெயாக விற்கலாம். இது போல் நிறைய வகையான எண்ணெய்களை தயாரித்து விற்கலாம்.
நீங்கள் ஒரு பெரிய கடையாக வைக்கலாம் அல்லது வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். நீங்கள் மக்களுக்கு அனைத்து எண்ணெய்களை தயாரித்து அந்த எண்ணெயில் சேர்க்கும் பொருளுடைய பெயரை வைத்து அதனை விற்கலாம். இதன் மூலம் மக்கள் எந்த பொருட்களின் மீது ஆர்வமும் செலுத்துகிறார்கள். எது முடி வளர்த்திக்கு உதவியாக இருக்கும் என்று தெரிந்துகொண்டு அந்த பொருட்களை கடையில் அதிகமாக தயாரிக்காலம்.
மேலும் இந்த மாதிரியான கடைகள் அதிகமாக இல்லை. நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டமும் அதிகமாக வரும். எந்த ஒரு இரசாயன பொருட்கள் சேர்க்காமல் மக்களுக்கு நல்ல முறையில் எண்ணெய்களை சேர்க்கிறோம் என்பதில் மகிழ்ச்சி இருக்கும்.
இந்த எண்ணெய்களை 1/2 லிட்டர் முதல் விற்கலாம். 1/2 லிட்டர் விலை 90 ரூபாய்க்கு விற்கலாம் அல்லது 100 ரூபாய் வரை விற்கலாம். தினமும் 20 பாட்டில் விற்றால் 2000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். இதனை கொஞ்சம் பெரிதாக மாற்றி பெரிய பெரிய கடைகளுக்கு விற்கலாம்.
மேலும் எண்ணெய்களை தயாரிக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇
முடி கொட்டுவது நின்று முடி காடுபோல வளர இந்த எண்ணெயை மட்டும் தடவுங்கள்..!
நரை முடியை கருப்பாக மாற்றவும், முடி நீளமாக வளருவதற்கும் ஒரே ஒரு எண்ணெய் மட்டும் போதும்..!
நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த ஒரு எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க..!
மேலும் இதுபோல் நிறைய எண்ணெய் தயாரிப்பு பற்றி தெரிந்துகொள்ள 👉👉 இயற்கை அழகு குறிப்புகள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |