முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

Home based business

Home based business

இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பின்மை என்பது அதிகமாகிவிட்டது படித்த இளைஞர்கள் பலர் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்துகொண்டிருக்கின்றன. அது போன்ற பயனர்கள் பயன்படும் வகையில் நாம் நம்முடைய பதிவில் கூறுகின்றன தொழில் மற்றும் வேலைவாய்ப்பு யோசனைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவில். பீட்ரூட் மால்ட் என்ற புதிய வகை ஆரோக்கிய கலவை தயாரிக்கும் தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். ராகி மால்ட் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பீட்ரூட் மால்ட் நம்மில் பலருக்கும் புதியது தான்.

நமக்கு புதியது என்பதாலேயே இந்த தொழிலில் போட்டியும் குறைவாக தான் இருக்கும். அதே நேரம் நம்முடைய தயாரிப்பை சந்தைப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டால் அந்த வெற்றி நிச்சயம் பிரம்மாண்டமானதாக தான் இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பீட்ரூட் மால்ட் நன்மைகள்:பீட்ரூட் மால்ட்

இரத்தத்தை அதிகரிக்கும்.

இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

சரும அமைப்பை மேம்படுத்தி இயற்கையான பொலிவை தருகிறது.

தேனீர், காபி மற்றும் பிற பானங்களுக்கு சிறந்த மாற்று இந்த ஆரோக்கிய கலவை.

ஃபோலேட் (வைட்டமின் B9) நிறைந்துள்ளது, நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு, ஆகி இதய ஆரோக்கியத்தை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.

உடல் பருமனை குறைக்க உதவி செய்கிறது.

உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

இவற்றில் கால்சியம் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கு, வளரும் குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சியை பலப்படுத்துகிறது.

இதனை பலன்களை அளிக்குடிய பீட்ரூட் மால்ட்-யில் பல சத்துக்கள் உள்ளதால் பலரும் இதனை தங்களின் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். அதனால் நீங்கள் பீட்ரூட்தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் எந்த வித தயக்கமும் இன்றி இந்த தொழிலை உடனடியாக துவங்குகள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் கையில் வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் முதலாளி ஆகலாம்..!

முதலீடு மற்றும் மூல பொருட்கள்:

இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பீட்ரூட், நாட்டு சர்க்கரை, பாதாம், முந்திரி, ஏலக்காய், மற்றும் பேக்கிங் மெஷின் ஆகியவை தேவைப்படும்.

பேக்கிங் மெஷின் விலை அதனுடைய மாடலை பொறுத்து மாறுபடும். குறைந்தபட்சம் ரூ 1000 முதல் இருந்து கிடைக்கிறது. மற்றபடி பீட்ரூட், நாட்டு சர்க்கரை, பாதாம், முந்திரி, ஏலக்காய் போன்ற அனைத்தையும் சேர்த்து 2000 இருந்தால் போதும் இந்த தொழிலை மிக எளிதாக ஆரம்பித்துவிடலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

இது ஒரு உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமாக விற்பனை மேற்கொள்வதற்கு GST கட்டாயம் வேண்டும்.

தேவையான இடம்:

இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு நாம் தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற ஒரு அவசியமும் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வைத்துள்ள பாதாம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து பாதாமில் உள்ள தோலை நீக்கிவிட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் தோல் நீக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.

பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். அடுத்து நாம் வாங்கி வைத்துள்ள பீட்ரூட்டை தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள பீட்ரூட், பாதாம், ஏலக்காய் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். எந்த அளவு வதக்க வேண்டும் என்றால் அதில் உள்ள தண்ணீர் வற்றி சிறிய கட்டிகளாக மாறும் வரை அடுப்பில் வதக்கினால் போதும், பிறகு அடுப்பில் இருந்து இறக்கி நன்கு குளிர விடுங்கள், நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளவும் அவ்வளவு தான் பீட்ரூட் மால்ட் தயார்.

விற்பனை செய்யும் முறை:

தயார் செய்த பீட்ரூட் மால்ட்டை பேக்கிங் செய்து மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் நேரடியாக சென்று விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யலாம்.

வருமானம்:

1/4 கிலோ பீட்ரூட் மால்ட் சந்தையில் 250 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன, நாம் 1/4 கிலோ பீட்ரூட் மால்ட்டை 250 ரூபாய் விகிதம் விற்பனை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் ஒரு நாளுக்கு 5 கிலோ பீட்ரூட் மால்டினை விற்பனை செய்தால் 5000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதில் செலவு போக 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2,000 ரூபாய் முதலீட்டில் இரட்டிப்பு வருமானம் தரக்கூடிய தொழில் என்றால் அது இதாங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil