300 ரூபாய் முதலீட்டில் 5000 ரூபாய் வருமானம் தரும் சுயதொழில்..!

Advertisement

எப்படி டாய்லெட் கிளீனர் தயாரிப்பது ?

How to Make Harpic Toilet Cleaner at Home in Tamil – பெண்கள், ஆண்கள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது நல்ல லாபம் தரும் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய ஒரு அருமையான சுயதொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது டாய்லெட் சுத்தம் செய்வதற்கு டாய்லெட் கிளீனர் பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் பயன்படுத்துவார்கள். வீடுகள் மட்டும் இல்லாமல் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என்று அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக டாய்லெட் கிளீனர் பயன்படுத்துவார்கள். இந்த டாய்லெட் கிளீனரில் ஒன்றான Harpic Liquid தயாரிப்பு முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழில் ஆரம்பிப்பதற்கு அதிக முதலீடு தேவைப்படாது.. வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெற முடியும். சரி வாங்க Harpic Liquid வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம். எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

5 லிட்டர் Harpic Liquid செய்ய தேவையான பொருட்கள்:

  • Ro வாட்டர் – 5 லிட்டர்
  • Acid Thickener – 500 ml
  • HCL Acid 33 – 1 லிட்டர்
  • Acid Blue Color – 5 Drops
  • 1/2 லிட்டர் பெட் பாட்டில் தேவையான அளவு

செய்முறை – How to Make Harpic Toilet Cleaner at Home in Tamil:

Harpic தயார் செய்வதற்கு முன் முதலில் உங்கள் இரண்டு கைகளிலும் கிளவுஸ், கண்களில் கண்ணாடி மற்றும் மூக்கில் மாஸ்க் போட்டு கொள்ளவும். ஏனென்றால் HCL Acid உங்கள் மேல் பட்டுவிட்டது என்றால் பிறகு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் ஆக அதையெல்லாம் போட்டு கொள்ளுங்கள்.

ஒரு அகலமான மற்றும் பெரிய வாளியை எடுத்துக்கொள்ளவும். உதாரணத்திற்கு 10 லிட்டர் பிடிக்கும் வாளியை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் 5 லிட்டர் RO வாட்டர் ஊற்றவும்.

பின் Acid Thickener 500 ml ஊற்றி குச்சியை பயன்படுத்தி கிளறிவிடுங்கள்.

பிறகு HCL Acid 33 ஒரு லிட்டர் சேர்த்து கவனமாக கிளறிவிடுங்கள்.

HCL Acid 33 சேர்த்து கிளறும்போது கலவையானது ஒரு ஜெல் பதத்திற்கு வரும்.

பிறகு Acid Blue Color  5 Drops சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள் அவ்வளவு தான் Harpic தயார். இதனை 1/2 லிட்டர், ஒரு லிட்டர் பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்யலாம்.

1/2 லிட்டர் பாட்டிலை 50 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாட்டிலை 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யலாம்.

ஒரு நாளுக்கு 50, 1 லிட்டர் பாட்டில் விற்பனை செய்தீர்கள் என்றாலே 5,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
மாதம் 18 லட்சம் வருமானம் தரும் அருமையான தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement