ஆன்லைனில் Affiliate Marketing மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

Advertisement

Affiliate Marketing | இணைப்பு சந்தைப்படுத்தல் 

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். அது என்ன தகவல் என்று தானே யோசிக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. அதில் ஆன்லைன் மூலம் அதிகம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். Affiliate Marketing என்பது என்ன என்று நம் அனைவருக்கும் பல கேள்விகள் இருக்கும். இந்த பதிவின் மூலம் இதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

Affiliate Marketing இல் இணைவது எப்படி:

Affiliate Marketing என்பது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடிய வழிகளில் ஒன்றாகும். இது பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைளில் ஓன்று. அதாவது ஒரு நிறுவனம் அவர்களின் பொருட்களை ஆன்லைனில் உங்களின் மூலமாக வேறொருவருக்கு விற்கும் போது ஒரு பங்கு உங்களுக்கு கிடைக்கும். பங்கு (கமிஷன்) என்பது 10 ருபாய் முதல் 10,000 ருபாய் வரை கிடைக்கும். இவற்றின் மதிப்பு நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களை பொறுத்து கிடைக்கும். Affiliate Marketing எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

Affiliate Marketing என்றால் என்ன என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ⇒ சந்தைப்படுத்தல் என்றால் என்ன

  • முதலில் ஏதாவது ஒரு “Affiliate Marketing” Program-ல் Sign up செய்து கொள்ளவேண்டும். 
  • மேலும், ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து அந்த பொருளை விளம்பரம் செய்யவேண்டும்.
  • அந்த பொருளுக்கென ஒரு (Link) கொடுப்பார்கள்.
  • நீங்கள் அந்த Link -ன் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும். அதாவது You Tube, Face Book போன்றவற்றின் மூலம் நீங்கள் விளம்பரம் செய்யலாம்.
  • இதுபோன்று அந்த லிங்கினை பயன்படுத்தி யாராவது பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு அதற்கான கமிஷன் கிடைக்கும்.

Affiliate Marketing தொடங்குவதற்கான வழிகள்:

Affiliate Marketing செய்வதற்கு பல வழிகள் உள்ளன. 

  • முதலில் நீங்கள் ஒரு பிளாக்கை(Blog) தொடங்குங்கள். அதன் மூலம் விளம்பரங்களை பகிர்ந்து பொருட்களை விற்கலாம்.
  • அல்லது Face Book -ல் விளம்பரம் செய்து அதன் மூலம் வாடிக்கையாளர்களை பெற்று, அவர்களிடம் உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.
  • மேலும், You Tube-ல் உங்களுக்கென ஒரு சேனலை தொடங்கி அதில் விளம்பரம் செய்வதன் மூலம் பொருட்களை விற்கலாம்.
சிறந்த 10 பிரான்சிஸ் பிசினஸ் ஐடியா

வலைப்பதிவின் மூலம் Affiliate Marketing செய்வது எப்படி:

  • முதலில் ஒரு வலைப்பதிவை (Blog) தொடங்குங்கள். Affiliate Marketing செய்வதற்கு மிகவும் சக்திவாய்ந்த தளம் பிளாக்கிங் (Bloggin) தான்.
  • எந்த பொருளுக்கு அதிகளவில் கமிஷன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதன்படி வலைப்பதிவில் (Blog) எழுதுங்கள்.
  • நீங்கள் ஒரு பொருளை தேர்வு செய்து அந்த பொருளை விளம்பரம் செய்து அதை பற்றி Content எழுதுங்கள்.
  • Email Marketing Services என்பதை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை உங்கள் வலைப்பதிவிற்கு (Blog) வர செய்யுங்கள்.
  • இதுபோன்ற முறைகளை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
  • இதன் மூலம் உங்களின் பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்.

Affiliate Marketing நன்மைகள்: 

  • நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் Affiliate Marketing தொடங்கலாம்.
  • நீங்கள் விற்ற ஒரு பொருளுக்கு கிடைத்த கமிஷனை விட, பல நாட்களுக்கு பிறகும் அதே பொருளுக்கு கிடைக்கும் கமிஷன் அதிகமாக இருக்கும். அதாவது உங்களுக்கு செயலற்ற வருமானம் (Passive Income) கிடைக்கும்.
  • இதில் முதலாளி என்று யாரும் இல்லை. நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்படலாம். இதற்கு வயது வரம்பு தேவையில்லை. யார் வேண்டுமானாலும் இதை தொடங்கலாம்.
  • Affiliate Marketing-ல் மட்டும் தான் அதிக லாபம் கிடைக்கிறது.
  • இதற்கு அதிக பணம் தேவைப்படாது.
  • எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். அது எவ்வளவு பொருட்கள் விற்பனையாகிறது என்பதை பொறுத்தே அமையும்.
  • இதை பற்றி ஏராளமான விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

Affiliate Marketing வகைகள்: 

  1. PPS – Pay Per Sale (விற்பனைக்கு பணம் செலுத்துங்கள்).
  2. PPL – Pay Per Lead (ஒரு முன்னணிக்கு பணம் செலுத்துங்கள்).
  3. PPC – Pay Per Click (ஒரு கிளிக்கிற்கு பணம் செலுத்துங்கள்).

Affiliate Marketing தயாரிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது:

  • Recurring Commission.
  • Frond End / Upgrade.
  • Evergreen products.

Affiliate Marketing எப்படி விளம்பரப்படுத்துவது:

  1. Website ( இணைய தளம்).
  2. You Tube (வலை ஒளி).
  3. Social Media (சமூக ஊடகம்).
  4. Email Marketing (மின்னஞ்சல் மார்க்கெட்டிங்).
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement